தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Dhanush Speech At Ilaiyaraaja Biopic Movie Launch

Dhanush: ‘கர்வமா இருக்கு; இளையராஜா கதாபாத்திரத்தில் நடிப்பது கஷ்டமா?.. என்னோட கையில அந்த உத்தி இருக்குற வரை’ - தனுஷ்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 20, 2024 05:48 PM IST

எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் இருந்து, இப்போது வரைக்கும், ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன்னால், அந்த காட்சிக்கு ஏற்றார் போல இருக்கக்கூடிய இளையராஜாவின் பாடலையோ அல்லது பின்னணி இசையையோ கேட்டுக் கொண்டு இருப்பேன்

 தனுஷ் பேச்சு!
தனுஷ் பேச்சு!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், “எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நான் அடிக்கடி சொல்வது உண்டு. நீ என்னவாக உன்னை பற்றி யோசிக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய். நம்மில் பல பேர் இரவில் தூக்கம் இல்லை என்றால் இளையராஜாவின் பாடல்களை கேட்டு இதமாக, மெய் மறந்து தூங்குவோம். 

ஆனால் நான் பல இரவுகள் இளையராஜா சாரை போல நாம் நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து நினைத்து தூங்காமல் படுத்து கொண்டு இருந்து இருக்கிறேன். 

இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஒன்று இசைஞானி இளையராஜா இன்னொன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில் ஒன்று தற்போது நிறைவேறுகிறது. இது எனக்கு ஒரு விதமான கர்வத்தை கொடுக்கிறது. நான் இளையராஜா சாரினுடைய  ரசிகன் மட்டும் அல்ல பக்தன். 

அவரது இசைதான் எனக்குத் துணை. இது எல்லோருக்குமே பொருந்தும். அதைத் தாண்டி அவரது இசை எனக்கு ஒரு நடிப்பு ஆசானும் கூட.. 

எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் இருந்து, இப்போது வரைக்கும், ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன்னால், அந்த காட்சிக்கு ஏற்றார் போல இருக்கக்கூடிய இளையராஜாவின் பாடலையோ அல்லது பின்னணி இசையையோ கேட்டுக் கொண்டு இருப்பேன். 

அந்த இசை அந்தக் காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்கும். அதை அப்படியே நான் உள்வாங்கி அந்த காட்சியில் நான் நடிப்பேன்.  ஒரு சில முறை வெற்றிமாறன் நான் அப்படி செய்வதை பார்த்திருக்கிறார். 

இளையராஜா கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப் பெரிய சவால் என்றும் இது மிகப்பெரிய பொறுப்பு என்றும் சொல்கிறார்கள் எனக்கு அப்படி தெரியவில்லை. இப்போதும் எனக்கு அதே இசை எப்படி நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுக்கும். 

இப்போது மேலே மேடைக்கு வரும் பொழுது கூட, இளையராஜா சாரிடம் நீங்கள் முன்னே செல்லுங்கள்.. நான் பின்னே வருகிறேன் என்று சொன்னேன்.. உடனே அவர், நான் என்ன உனக்கு வழிகாட்டியா என்று கேட்டார். 

நான் இப்போது சொல்கிறேன்.. வழிகாட்டி தான் சார்… இத்தனை வருடங்களாக வழிகாட்டி கொண்டே தான் இருக்கிறீர்கள். இப்போதும் வழிகாட்டியாக இருந்து கொண்டு இருக்கிறீர்கள். 

நான் உங்களை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறேன். விடுதலை திரைப்படத்தில் ஒரு பாடலை நான் பாடும் பொழுது இளையராஜா அங்கே இருந்தார். 

உடனே நான் அவரிடம், சார் நீங்கள் இங்கே தான் இருப்பீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் எப்போதும் நான் உன்னுடன் இல்லை என்றுகேட்டார். என்னுடைய அம்மாவின் வயிற்றில் நான் இருக்கும் போதிலிருந்து நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன். ”  என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்