RIP Daniel Balaji : இறந்த பின்பும் நல்லது செய்த நடிகர் டேனியல் பாலாஜி.. என்ன செய்தார் தெரியுமா? இதோ பாருங்க!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Daniel Balaji : இறந்த பின்பும் நல்லது செய்த நடிகர் டேனியல் பாலாஜி.. என்ன செய்தார் தெரியுமா? இதோ பாருங்க!

RIP Daniel Balaji : இறந்த பின்பும் நல்லது செய்த நடிகர் டேனியல் பாலாஜி.. என்ன செய்தார் தெரியுமா? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Mar 30, 2024 10:08 AM IST

இன்று மாலை நடிகர் டேனியல் பாலாஜி உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யபட உள்ளது. இந்நிலையில் அகர்வால் கண் மருத்துவமனைக்கு நடிகர் டேனியல் பாலாஜியின் கண் தானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நடிகர் டேனியல் பாலாஜி
நடிகர் டேனியல் பாலாஜி

டேனியல் பாலாஜியின் மரண செய்தியை அறிந்து நேரடியாக அவர் உடல் வைக்கப்பட்டிருந்த கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் புரோமேட் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் திரைத்துறை பிரபலங்கள் குறிப்பாக தயாரிப்பாளர் கௌதம் வாசுமேனன், அமீர் வெற்றிமாறன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் போன்ற திரை பிரபலங்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.

டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது ரசிகர்கல் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர். மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யபட உள்ளது. இந்நிலையில் அகர்வால் கண் மருத்துவமனைக்கு நடிகர் டேனியல் பாலாஜியின் கண் தானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான வில்லன் நடிகராக அறியப்படும் நடிகர் டேனியல் பாலாஜி, மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். 48 வயதான அவர், கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2003 ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகமான டேனியலுக்கு, காக்க காக்க படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், அவருக்கு பேர் வாங்கித் தந்தது.

தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்திருந்தாலும், 2006ம் ஆண்டு அவர் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம், அவருக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தது. அமுதன் என்கிற அந்த கதாபாத்திரம், வேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது என்றே கூறலாம்.

அதைத் தொடர்ந்து 2007 ல் வெற்றி மாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் ரவி என்கிற கதாபாத்திரமும், டேனியல் பாலாஜிக்கு பெரிய அளவில் பேரை தந்தது. ஆனாலும் அதன் பின் பெரிய அளவில் அவர் படங்களில் தோன்றவில்லை. குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார். வடசென்னை திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த தம்பி கதாபாத்திரம் அவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது.

சமீபத்தில் ஆன்மிக வழியில் அதிக நாட்டம் கொண்டவராக மாறிய டேனியல் பாலாஜி, கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட ஆன்மிக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். திரைத்துறையில் நேர்மையாகவும், தன் திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்ட டேனியல் பாலாஜி, இளம் வயதில் காலமான சம்பவம், அவரது ரசிகர்களை மட்டுமின்றி, திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிப்பு மட்டுமின்றி, டெக்னிக்கலாகவும் சினிமாவில் கை தேர்ந்தவராக பணியாற்றி வந்தார். அவருடைய இழப்பை தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.