தொடரும் டைவர்ஸ்.. எல்லாம் ஒரு மேனியா தான்.. குட்டிக் கதை சொல்லி உண்மையை உடைத்த டைரக்டர் போஸ் வெங்கட்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தொடரும் டைவர்ஸ்.. எல்லாம் ஒரு மேனியா தான்.. குட்டிக் கதை சொல்லி உண்மையை உடைத்த டைரக்டர் போஸ் வெங்கட்..

தொடரும் டைவர்ஸ்.. எல்லாம் ஒரு மேனியா தான்.. குட்டிக் கதை சொல்லி உண்மையை உடைத்த டைரக்டர் போஸ் வெங்கட்..

Malavica Natarajan HT Tamil
Jan 02, 2025 10:49 AM IST

சமூகத்தில் அதிகரிக்கும் விவாகரத்து மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து நடிகர் போஸ் வெங்கட் குட்டி கதை மூலம் கருத்து சொல்லி உள்ளார்.

தொடரும் டைவர்ஸ்.. எல்லாம் ஒரு மேனியா தான்.. குட்டிக் கதை சொல்லி உண்மையை உடைத்த டைரக்டர் போஸ் வெங்கட்..
தொடரும் டைவர்ஸ்.. எல்லாம் ஒரு மேனியா தான்.. குட்டிக் கதை சொல்லி உண்மையை உடைத்த டைரக்டர் போஸ் வெங்கட்..

பொருத்தமானத செலக்ட் பண்ணுங்க

டைவர்ஸ் என்பது வாழ்க்கைக்கு அவசியம் இல்லாத ஒன்னு. நமக்கு பொருத்தமானத நாம செலக்ட் பண்ணிகனும். எனக்கு புல்லட்ட சாய்த்து பிடிக்குற அளவுக்கு திறமை இல்ல. ஆக்டிவ்வா பைக் எனக்கு வசதியா இருக்கு. ஆனா என்கிட்ட புல்லட் வாங்க காசு இருந்தாலும் எனக்கு வசதி ஆக்டிவ்வாலதான்.

அப்போ நம்ம பயணத்துக்கு எது தேவையோ அத அறிஞ்சு நாம வண்டி வாங்கனும். கொஞ்ச நேரம் பயணம் பண்ற வண்டிக்கே நாம இத பாக்கனும்ன்னா வாழ்க்கை முழுவதும் பயணம் பண்ண எல்லாமே பாக்கணும்.

நம்ம தகுதிய மாத்தனும்

காசு பணம் தான் பெருசுன்னு புல்லட்ட வாங்கிட்டு, பின்னாடி அத சரியா பாத்துக்க முடியலன்னு விக்குற மாதிரி தான் இங்க டைவர்ஸ் எல்லாம் நடக்குது. நமக்கு எது பொருத்தமானதோ அதை தான் தேர்வு செய்யனும். ஒருவேள பொருத்தமற்றது, அமைஞ்சிட்டா கூட அதுக்கு தகுந்த தகுதிய நாம அமைச்சுக்கனும்.

வாகனம் எதுவாக இருந்தாலும், அதுக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திக்கனும். தெரியாம புல்லட் வாங்கிட்டேன்னு பொருள விக்கலாம். ஆனா திருமணமான ஒரு பொன்னையோ . பையனையோ அப்படி சொல்லிட்டா அது பாவம்.

அதிகபட்ச டைவர்ஸ் இதுக்காக தான்

இங்க டைவர்ஸ்ங்குறது ஒரு புரிதல் இல்லாமை தான். வாழணும்ன்னு நெனச்சா எல்லாரும் வாழலாம். இருவருக்குள் ஒரு கம்ஃப்பர்ட் இல்லன்னா இப்போ பிரிஞ்சிடுறாங்க.

இங்க நியாயமான பிரச்சனைகள் நிறைய இருக்கு. எனக்கும் உனக்கும் உடல் ரீதியா பொருத்தம் இல்ல. மற்றது பொருந்தலன்னு சொல்றாங்க. வெளிநாடுகள்ல அதிகபட்சமா டைவர்ஸ் வாங்குறதுக்கு காரணம் வாய் நாற்றமும் உடல் நாற்றமும் தான். ஆனா, நம்ம நாட்டுல அந்தப் பிரச்சனை இல்ல.

நம்ம ஊருல அன்றைய தேவைக்கு ஒரு திருமணம் செய்துட்டு அந்த தேவை தீர்ந்து போனதும் டைவர்ஸ் வாங்குறாங்க. ஒரு டைவர்ஸ் கேக்குறாங்கன்னா அதுல ஒரு அர்த்தம் இருந்தா பரவாயில்ல. இங்க அர்த்தமே இல்லாம பல விவாகரத்து நடக்குது.

இதெல்லாம் ஒரு மேனியா

என்ன பொருத்த வரைக்கும் ஒரு திருமணம் நடந்து, நம்ம வாழ்க்கையில ஒரு பெண், குடும்பம், குழந்தைகள்ன்னு வந்தா, அவங்களோடவே நேரம் செலவழிக்க முடியல. அதுக்குள்ள அந்த உறவ முறிச்சிட்டு அடுத்த கல்யாணம், மனைவி, குடும்பம், குழந்தைன்னு போயிட்டு இருக்காங்க.

இந்த மாதிரி ஆளுங்க பலபேர் டைவர்ஸ் கூட வாங்காம அடுத்தடுத்த பொன்னுங்களையோ இல்ல பசங்களையோ தேடித்தேடி போறாங்க. இவங்க எல்லாம் ஒரு மேனியாக்கள். இவங்க எல்லாம் போறபோக்குல எவன் வாழ்க்கையாவது கெடுத்து விட்டுட்டு போயிடுவாங்க. அவங்கள எல்லாம் நம்மளால ஒன்னும் பண்ண முடியாது.

மனைவிய ஜெயிக்க விடு

எந்த திருமணத்துக்கு போனாலும் அந்த மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் 5 நிமிஷம் உக்கார வச்சு திருமண வாழ்க்கைன்னா என்ன அது எந்த இடத்துல உடையும்ன்னு பேசுவேன். எனக்கு தெரிஞ்சவரு ஒருத்தர் வீட்ல சண்ட வந்தா தோத்துப் போயிடுன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவாரு. உன் மனைவி ரொம்ப சண்ட போட்டு வாதம் பண்ணுனா அவங்கள ஜெயிக்க விட்டுடுடா என்பார். அத பண்ணுனதுனால என் குடும்பத்துல சண்டை எல்லாம் குறைஞ்சது.

ஒன்னுமே இல்லாத விஷயத்துக்காக சண்டை போட ஆரம்பிச்சா அது குடும்பம், அவங்க அம்மா அப்பா வரைக்கும் போயிடும். அத எளிமையா முடிக்குற பக்குவம் நமக்கு இருக்கனும். இத செய்ய தவறிட்டோம்ன்னா தான் டைவர்ஸ் உள்ள வர காரணமாக அமையுது என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.