தீபாவளி சமயத்தில் கமல் வீட்டில் நடந்த சோகம்.. தவிக்கும் கமல்.. இப்படியா நடக்கணும்?
நடிகர் கமல் ஹாசனின் சகோதரரான சாரு ஹாசன், தீபாவளி சமயத்தில் நடந்த சிறு விபத்தால் மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் எப்படி சினிமாவில் தவிர்க்க முடியாத மனிதரோ, அதேபோலத் தான் அவரது மூத்த சகோதரரான சாரு ஹாசன். இவர், நடிகையும் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினியின் தந்தை. தற்போது 93 வயதாகும் அவர், இந்த வயதிலும் சினிமாவில் நடித்து வருகிறார்.
கமலைப் போலவே பிரகாசிக்கும் சாரு ஹாசன்
சினிமாவில் கமல் ஹாசன் எப்படி, சினிமாவில், நடிப்பு, இயக்கம், பாடகர், என பல பரிமாணங்களில் கலக்கி வருகிறாரோ அதேபோலத்தான சாரு ஹாசனும். இவர், தமிழில் வெளியான உதிரிப் பூக்கள் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாகவே அவர், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் சில படங்களை இயக்கியும் உள்ளார். அதுமட்டுமின்றி, இவர் சிறந்த வழக்கறிஞரும் கூட.
தீபாவளி நாளில் அறுவை சிகிச்சை
இப்படி, தனது முதுமையிலும் சினிமாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் சாரு ஹாசன், தீபாவளி நாளுக்கு முன் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப் படி, அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோவை நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
