Chaplin Balu: ‘சினிமாவே நான்தான்னு நினைக்கக்கூடாது.. என் கேரக்டர பிடுங்கி நடிச்சாரு’ - சார்லின் பாலு!
Chaplin Balu: அதை பார்த்த உடனேயே, நான் அவரிடம் சென்று, ஏன் கோபமாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். முதலில் அவர் பிடி கொடுக்கவில்லை. அடுத்ததாக ஒரு பேப்பரை எடுத்து, அந்தப்படத்தில் இடம் பெற்ற முக்கியமான நடிகர்களின் பெயர்களை எழுத சொல்லி, அந்தப்பட்டியலில் தான் இல்லை என்பதை கூறினார். - சார்லின் பாலு!
Chaplin Balu: நடிகர் சார்லின் பாலு தமிழ்நாடு நவ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் வடிவேலு பற்றி பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான்தான் சினிமா என்று யாரும் நினைக்கவே கூடாது. அது, அவர்களை தவறான இடத்திற்கு அழைத்துச் சென்று விடும். ‘பூந்தோட்டம்’ திரைப்படத்தில் உங்களுக்கு எல்லாம் தெரிந்த அந்த காமெடி நடிகர், என்னுடைய கேரக்டரை பிடுங்கி நடித்தார். ஆம், பூந்தோட்டம் திரைப்படத்தில் எனக்கு 10 நாட்கள் ஷூட்டிங் என்று கூறியிருந்தார்கள். இதையடுத்து நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருந்தேன்.
வடிவேலுவின் கோரமுகம்
எனக்கு எதிர்புறமாக அந்த நடிகர் உட்கார்ந்து இருந்தார். அவரை பார்த்த போது, அவர் கொஞ்சம் கோபமாக இருக்கிறார் என்பது தெரிந்தது. அதை பார்த்த உடனேயே, நான் அவரிடம் சென்று, ஏன் கோபமாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். முதலில் அவர் பிடி கொடுக்கவில்லை. அடுத்ததாக ஒரு பேப்பரை எடுத்து, அந்தப்படத்தில் இடம் பெற்ற முக்கியமான நடிகர்களின் பெயர்களை எழுத சொல்லி, அந்தப்பட்டியலில் தான் இல்லை என்பதை கூறினார்.
அதாவது, நான் கமிட் ஆகி இருந்த கேரக்டரை அவர்தான் செய்ய வேண்டும் என்று மறைமுகமாக சொன்னார். இதைக்கேட்ட எனக்கு அழுகையாக வந்துவிட்டது. அடுத்த நாள் பார்த்தால், அந்த கேரக்டர் அவருக்கு சென்று விட்டது. இந்த நிலையில், அந்தப்டப்பிங் ஸ்டியோவிற்கு என்னை அழைத்து இருந்தார்.
அங்கு சென்று பார்த்த பொழுது, அந்த கேரக்டரை காண்பித்து செல்லம்… இந்த கேரக்டரை நீ செய்வதாக இருந்தாயாமே, இது எனக்கு தெரிந்திருந்தால், நான் அந்த கேரக்டரை செய்திருக்கவே மாட்டேனே என்று சொன்னார். அதற்காக நான் அவர் மீது கோபப்படவோ, பொறாமைப்படவோ இல்லை. ஆனால், அதை அவர் எப்போது கூறி இருக்க வேண்டும். அவர் அந்த கேரக்டரை நன்றாக செய்யவில்லை. உள்ளார்ந்து நடிக்க வில்லை.” என்று பேசினார்.
முன்னதாக வடிவேலு குறித்து தயாரிப்பாளர் வி. சேகர் பேசி இருந்தார். அந்த பேட்டியும் இங்கே!
கேப்டனை பற்றி அப்படி பேசி இருக்கக்கூடாது
இது குறித்து அவர் பேசும் போது, “கேப்டனை வடிவேலு அவ்வளவு கீழ்த்தரமாக பேசினார். அவர் அப்படி அவர் பேசி இருக்கக்கூடாது காரணம் என்னவென்றால், கேப்டன் இயல்பிலேயே மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். ஆனால் வடிவேலு அதையெல்லாம் மறந்து விட்டு, அவரை தாறுமாறாக பேசினார் வடிவேலால் எனக்கு கூட ஒரு பாதிப்பு வந்தது. அது என்னவென்றால், சரவணா பொய்யன் என்ற படத்தை நான் எடுத்தேன்.அதில் என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன்.
இந்த நிலையில், அந்த படத்தில் வடிவேலுவை நடிப்பதற்காக அழைத்தேன். அப்போது அவர், என்னை எப்படி நீங்கள் உங்களது படங்களில் நடிக்க வைத்து தூக்கி விட்டீர்களோ, அதே போல உங்களது மகனையும் நான் தூக்கி விடுகிறேன். படத்தில் அவனுக்கு மாமாவாகவோ, அண்ணனாகவோ என எந்த கேரக்டர் இருந்தாலும், அதை செய்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
மகனின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது
அதை நம்பிதான் நான் எம்பிஏ முடித்து வெளிநாடு செல்வதாக இருந்த என்னுடைய மகனை, இங்கே அழைத்து வந்து படங்களில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினேன். படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தோம். ஆனால், திடீரென்று வடிவேலு, நான் திமுக சார்பாக தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டும், ஆகையால் பட சம்பந்தமான வேலைகளை ஒரு மாதம் தள்ளி போடுங்கள் என்று சொன்னார். எங்கள் வீட்டின் பெரும்பான்மையான கல்யாணங்கள் கலைஞரின் தலைமையிலேயே நடந்திருக்கிறது காரணம் என்னவென்றால், என்னுடைய மாமனார் திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.
இந்த நிலையில்தான் நான் வடிவேலுவிடம், திமுக சார்பாக நீ பிரச்சாரம் செய்தால், பிறர் எப்படி படத்தை வந்து பார்ப்பார்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு வடிவேலு இல்லை.. திமுக ஜெயித்தால், எனக்கு எம்பி பதவி அளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள் என்று கூறி, பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டான் அப்போது வடிவேலு மார்க்கெட் உச்சத்தில் இருந்தான்.
தாறுமாறான பேச்சு
பிரச்சாரத்திற்குச் சென்றவர் அங்கு சும்மா இல்லாமல், விஜயகாந்த் குறித்து தாறுமாறாக பேசினார். அது விஜயகாந்தை மிகவும் பாதித்து விட்டது. அந்த தேர்தலில் அதிமுக ஜெயித்து விட்டது. இதையடுத்து தன்னை அதிமுக குறிவைத்து விட்டதாக என்னிடம் சொன்னான் இடத்தில். மேலும் தான் மதுரை சென்று விட்டதாகவும், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு அங்கு வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் அவனுக்கு பதிலாக, வடிவேலுவையும் கருணாசையும், படத்தில் கமிட் செய்து, படத்தை எடுத்தேன் என்னுடைய மகனின் வாழ்க்கையானது அதில் பாதிக்கப்பட்டது” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்