‘ஐஸ்கிரீமில் கவிழ்ந்த சாவித்ரி.. ரூமை சாத்திய சந்திரபாபு.. காமத்தில் காணாமல் போன ஜெமினி கணேசன்!' - ஜவஹர்!
சாவித்திரியும் சந்திரபாபுவும் படத்திற்குச் செல்லவில்லை மவுண்ட் ரோட்டில் இருக்கக்கூடிய ஒரு பிரபலமான ஐஸ்கிரீம் பார்லரில் சாவித்திரிக்கு மிக மிகப் பிடித்த பாதாம் வித் சாக்லேட் ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்டு உரையாடிக்கொண்டு இருந்தார்கள் - ஜவஹர்!

‘ஐஸ்கிரீமில் கவிழ்ந்த சாவித்ரி.. ரூமை சாத்திய சந்திரபாபு.. காமத்தில் காணாமல் போன ஜெமினி கணேசன்!' - ஜவஹர்!
சந்திரபாபுவுக்கும் சாவித்ரிக்கும் இடையே முளைத்த காதல் குறித்து சந்திரபாபு சகோதரர் ஜவஹர் மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
குடி, அசைவ உணவு
அவர் பேசும் போது, ‘சந்திரபாபுவும், ஜெமினி கணேசனும் மிக மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அப்போது ஜெமினி கணேசன் சாவித்திரியோடு இருந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது. சாவித்திரி வீட்டில் பெரிதாக அசைவ உணவுகளை சமைக்க மாட்டார். அதனால், ஜெமினி கணேசன் என்னுடைய அண்ணனான சந்திரபாபுவின் வீட்டிற்கு வந்துவிடுவார். இங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து, தேவையான அசைவு உணவுகளை வாங்கியும், மது அருந்திக் கொண்டும் நேரத்தை கழிப்பார்கள்.


