தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Black Pandi Says Anjali Was Totally Changed And He Was Moved On

Anjali: பழைய விஷயங்களை மறந்த அஞ்சலி.. இதுவும் கடந்து போகும் என ஃபீலிங்காக நகர்ந்த சென்ற பிளாக் பாண்டி

Aarthi Balaji HT Tamil
Jan 22, 2024 11:43 AM IST

நடிகை அஞ்சலி பழைய மாதிரி நடந்து கொள்ளவில்லை என நடிகர் பிளாக் பாண்டி மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.

அஞ்சலி
அஞ்சலி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு இயக்குநர் ராம் இயக்கிய முதல் திரைப்படமான, ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அவர் முதல் படத்திலேயே அழகான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் எளிதாக மனதில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் மூலம் அவரின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் ஏராளமான தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.

கை நிறைய வாய்ப்புகளுடன் முன்னணி கதாநாயகி நடிகையாக வளர்ந்தார் அஞ்சலி. ஆனால் பின்னர் சில சர்ச்சைகள் பாதித்தன. அஞ்சலி மீண்டும் திரையுலகில் தீவிரமாக இருந்தார், ஆனால் ஆரம்ப வெற்றியை மீண்டும் செய்ய முடியவில்லை. ஆனால் சமீபத்தில், அஞ்சலிக்கு சில குறிப்பிடத்தக்க வேடங்கள் கிடைத்தன.

இதனிடையே அஞ்சலி பழைய மாதிரி நடந்து கொள்ளவில்லை என நடிகர் பிளாக் பாண்டி, Thiraikadal என்ற யூடியூப் சேனலில் பேட்டி அளித்து உள்ளார்.

அதில், “ நானும், அஞ்சலியும் அங்காடி தெரு படம் முன்பில் இருந்தே நண்பர்கள். வா, போ என சொல்லும் அளவிற்கு நெருக்கம். நடன இயக்குனர் ஜெயந்தி மாஸ்டரின் மாணவர்கள் நாங்கள். நாங்கள் இரண்டு பேரும் நடன வகுப்பில் பழகினோம்.

அஞ்சலி எனக்கு முன்பு தான் நடனமாடுவார். உன்னை பார்த்து தான் நான் நடனமாடி கொண்டு இருக்கிறேன், ஒழுங்காக நடனமாடு என சொல்லுவேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஏன் இவர்களுடன் பழகினோம் என்று கூட யோசனை வரும். நிறைய பேர் அப்படி தான் யோசனை செய்கிறார்கள் என நினைக்கிறேன். 

நான் எதாவதது தவறு செய்துவிட்டானே என்று கூட கேட்டு இருக்கிறேன். அப்படி எல்லாம் இல்லை என சொன்னார் அஞ்சலி. மீண்டும் நாங்கள் ஜெயம் ரவியுடன் இணைந்து சகலகலா வல்லவன் படம் நடித்தோம். அப்போது தான் பேசினேன்.

உனக்கு எதாவதது பிரச்னையா என கேட்ட போது, இல்லை என சொன்னார். இரண்டு, மூன்று முறை மெசேஜ் கூட அனுப்பினேன் பதில் சொல்லவே இல்லை. அதனால் விட்டுவிட்டேன். இதுவும் கடந்து போகும் என நகர்ந்துவிட்டேன் “ என்றார்.

நன்றி: Thiraikadal

அஞ்சலி பற்றி ஏற்கனவே பல கிசுகிசுக்கள் திரையுலகில் பரவி வருகிறது. நடிகர் ஜெய்யை அஞ்சலி காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த செய்தியை மறுத்து அஞ்சலி சமீபத்தில் பேசினார்.

அதில், “ சினிமா துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். முன்னதாக நான் ஜெய்னுடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. பிறகு ஒரு தொழிலதிபரை மணந்து அமெரிக்காவில் குடியேறினேன்.

இதுபோன்ற செய்திகளைப் பார்த்து நான் சிரிக்கிறேன். நடிகையாக இருப்பதால் ஊடகங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுகின்றன “ என்றார். 2011 ஆம் ஆண்டு எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலியும், ஜெய்யும் இணைந்து நடித்தனர். எம்.ஏ.சரவணன் இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் கவனிக்கப்பட்டது. இவர் கடைசியாக கேங்ஸ் ஆஃப் கோதாவரி மற்றும் கேம் சேஞ்சர் ஆகியவை பைப்லைனில் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.