தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Bhagyaraj Condoles The Death Of Singer Bhavadharani

RIP Bhavatharini : "சின்ன வயதிலேயே பவதாரணி போன்றவர்களை கடவுள் கூட்டிக் கொள்வது கஷ்டமாக உள்ளது" - பாக்யராஜ் !

Divya Sekar HT Tamil
Jan 27, 2024 06:53 AM IST

சின்ன வயதிலேயே பவதாரணி போன்றவர்களை கடவுள் கூட்டிக் கொள்வது கஷ்டமாக உள்ளது என மறைந்த பாடகி பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் பேட்டியளித்துள்ளார்.

பாக்யராஜ் இரங்கல்
பாக்யராஜ் இரங்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். பவதாரணி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜவின் மகள். கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி ஆவார். பவதாரிணி கடந்த 2005ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சபரி ராஜன் ஹோட்டல் பிஸினஸ் செய்து வருகிறார். மேலும் பாவதாரிணியும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் பாடியுள்ளார். இளையராஜா இசையில் பாரதி படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் பாடிய பவதாரிணிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. முன்னதாக இவர், ‘ராசய்யா’ படத்தில் பாடகியாக அறிமுகமானார். மேலும் இசையமைப்பாளர்களான தேவா மற்றும் சிற்பி ஆகியோரது இசையிலும் பவதாரிணி பாடியுள்ளார்.

‘அழகி’ படத்தில் இவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. மேலும், ‘உல்லாசம்’ படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த 'அநேகன்’ படத்தில் 'ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி' பாட்டும் பவதாரிணியின் தனித்துவமான குரலுக்கு மிகப்பெரிய சான்றாகும்.

பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு, தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்தில் நேற்று பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

அப்போது நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் பாடகி பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “குழந்தைகளோட விளையாட்டு சாமன் பொம்மை. கடவுளுக்கு விளையாட்டு பொம்மை மனிதர்கள். அதனால் தான் என்னமோ இவ்வளவு திறமைகள் இருந்தும், இவ்வளவு சின்ன வயதிலேயே பவதாரிணி போன்றவர்களை கடவுள் கூட்டிக் கொள்வது கஷ்டமாக உள்ளது.

பவதாரணி ஆத்மா சாத்தியடைய வேண்டிகிறேன். அதேப்போல இளையராஜா அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என மறைந்த பாடகி பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்,நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் பேட்டியளித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து நேற்று 10 மணிக்குப் பின் பவதாரிணியின் உடல் சாலை மார்க்கமாக இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் பங்களா இருக்கும் லோயர்கேம்பில் பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைப்புரமாக இருந்தாலும், அவரது அன்னை சின்னத்தாய், அவரது மனைவி ஜீவா ஆகியோரது நினைவிடம், அவரது லோயர்கேம்ப் பங்களா எனப்படும் தோட்டத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது தாய் மற்றும் மனைவியின் நினைவுநாள், தீபாவளியன்று அங்கு செல்லும் இளையராஜா நினைவிடங்களில் மனம் உருக வழிபட்டுவிட்டு, தியானம் செய்வார் எனக்கூறப்படுகிறது. அத்தகைய இடத்தின் அருகில் தான் பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel
பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.