"சினிமா ஒரு சுடுகாடு.. குடும்பமா சேர்ந்து பொன்னுங்கள விக்குறாங்க" குண்டைத் தூக்கிப் போட்ட பாபூஸ்
சினிமாவில் நடிக்க வரும் பெண்கள், அவர்களின் குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தவறான பாதைக்கு செல்கின்றனர் என நடிகர் பாபூஸ் அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளார்.
தமிழ் சினிமா எப்படி சென்று கொண்டிருக்கிறது, அங்கு பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், சினிமாத் துறையில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வில்லன் நடிகர் பாபூஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு, பாபூஸ் அளித்த பேட்டியில் தான் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார். சண்டை செய்வதை பிடித்து சினிமாவிற்கு வந்த இவர் டீ கொடுப்பதில் தொடங்கி, படத்தின் இயக்குநராகும் வரை உயர்ந்துள்ளார்.
நான் மிகவும் நேர்மையானவன்
இந்நிலையில், பாபூஸ் அளித்த பேட்டியில், "ஒரு புரொடக்ஷன் மேனேஜர் கமிஷன் வாங்குவான் என உலகம் சொல்லும். ஆனால் , நான் அப்படி இல்லை. சினிமாவால் பாபூஸ் பீக்கில் இருந்த சமயத்தில் என்னிடம் தவறாக நடிக்க முயற்சி செய்தார் என யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
சுவலட்சுமி தங்கம்
சுவலட்சுமி என்ற தங்கம் சினிமாவில் இருந்தது. என்னுடைய பொன்வண்ணன் படத்தில் தான் நான் அவரை முதல் முதலில் சந்தித்தேன். அவர் சினிமாவில் ஒழுக்கமாக வாழவில்லையா? ஏன் அவரைப் போல் இங்கு யாராலும் இருக்க முடியவில்லை.
பெண்களை விற்கும் குடும்பங்கள்
சினிமாவில் நடிக்க ஒரு பெண்ணை கூட்டி வரும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்தவன் காசில் வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும் என ஆசை. அதற்காக அவர்களுடைய பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள்.
நடிக்க வரும் பெண்கள் கெட்டுப் போவதற்கு காரணம் நடிகர்களோ, டைரக்டரோ, தயாரிப்பாளரோ காரணம் அல்ல. அவர்களை பெற்றவர்களும், உடன் இருப்பவர்களும் தான் காரணம்.
தன் உறவுகளை சந்தோஷமாக வாழ வைக்க பெண்கள் கெட்டுப் போகின்றனர். என்னிடமே வந்து என் பொன்ன என்ன வேணும்னாலும் பண்ணுங்க. ஆனா நடிகை ஆக்கிடுங்கன்னு எத்தனையோ பேர் சொல்லிருக்காங்க.
சினிமா ஒரு சுடுகாடு
இங்க கெட்டுப்போக தயாராகவே பெண்கள் வந்துவிட்டு அடுத்தவர்களை குறை சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை. சினிமா சுடுகாடு. அதை தெரிந்தே ஏன் நடிக்க வருகிறீர்கள்.
எள்லா துறையிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அதே போல கெட்டவர்களும் இருக்கிறார்கள். நான் யோக்கியமாக இருக்க வேண்டுமா இல்லையா என்பது என் கையில் தான் இருக்கிறது.
சினிமா எனக்கு அம்மா
நான் 36 வருடமாக சினிமாத் துறையில் இருக்கிறேன். இங்கு நான் எந்த தவறும் செய்ததில்லை. சினிமா எனக்கு அம்மா மாதிரி. சினிமாவை தவறாக பேசும் யாரையும் எனக்கு பிடிக்காது. ஒரு துறையில் இருப்பவர்கள் தான் நேர்மையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறுக்கு மொத்த துறையையும் தவறாக பேசுவது சரியல்ல.
சினிமாவிற்கு இதனால் தான் வந்தேன்
சினிமாவில் நான் இந்த நிலைக்கு செல்ல வேண்டும். இந்த காரணத்திற்காகத் தான் நான் சினிமாவிற்கு வந்தேன் என சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. அதனால், வாய்ப்பு கிடைத்த அனைத்து துறையிலும் பணியாற்றினேன். எனக்கு சண்டை தெரியும். அதனால், அதை நம்பி மட்டும் தான் சினிமாவிற்குள் வந்தேன்.
உலகம் முழுவதும் வெளியான படம்
சினிமாவில் எனக்கு பிடித்தது டைரக்ஷன் தான். நான் பெரிய டைரக்டராக வரவில்லை என்றாலும் கூட குழந்தை திருமணங்களுக்கு எதிராக நான் எடுத்த ஷார்ட் பிலிம் விருது பெற்று பல நாடுகளில் திரையிடப்பட்டது என அந்தப் பேட்டியில் அவர் கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்