தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Benjamin Feels That Big Actors Die But Small Actors Don't

Actor Benjamin: 'பெரிய நடிகர்கள் இறந்தா போறாங்க.. ஆனா, சின்ன நடிகர்கள் இறந்தால்..': நடிகர் பெஞ்சமின் ஆதங்கம்

Marimuthu M HT Tamil
Jan 27, 2024 09:50 PM IST

'பெரிய நடிகர்கள் இறந்தால் மரியாதை செலுத்தப் போகிறார்கள். ஆனால், சின்ன நடிகர்கள் இறந்தால் போவது இல்லை என நடிகர் பெஞ்சமின் ஆதங்கப்பட்டுள்ளார்.

'பெரிய நடிகர்கள் இறந்தால் போறாங்க.. ஆனால், சின்ன நடிகர்கள் இறந்தால்..': நடிகர் பெஞ்சமின் ஆதங்கம்
'பெரிய நடிகர்கள் இறந்தால் போறாங்க.. ஆனால், சின்ன நடிகர்கள் இறந்தால்..': நடிகர் பெஞ்சமின் ஆதங்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

துணை நடிகர்களுக்காக டிரஸ்ட் ஒன்றை உருவாக்கியுள்ள நடிகர் பெஞ்சமின், அதன் தொடக்கவிழா மேடையில் பேசுகையில், ‘’தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் யார் இறந்தாலும் போகமாட்டேங்குறாங்க. நடிகர் கடையம் ராஜா அண்ணன் இறந்ததற்கு ஒருத்தர்கூட வரவில்லை. டான்ஸர்ஸை தவிர யாரையும் நான் பார்க்கவில்லை. அதேமாதிரி போண்டா மணி இறந்ததுக்கு நான்கைந்து காமெடி நடிகர்கள் மட்டும் வந்திருந்தாங்க. இந்த மேடையில் இருந்தவங்க வந்திருந்தாங்க. வேறு யாருமே வரவில்லை. பெரிய நடிகர்கள் இறந்துபோனால் வரிசைகட்டிட்டு போறாங்க. சின்ன நடிகர் இறந்தால், யாருமே கண்டுக்கிறது இல்ல. இதுக்கு என்ன செய்யலாம். சரி, சின்ன நடிகர்களுக்காக நாம் ஒரு டிரஸ்ட் ஒன்று ஆரம்பிப்போம் அப்படின்னு சொல்லி, சின்ன நடிகர்களுக்காக ஒரு ட்ரெஸ்ட் ஒன்று ஆரம்பிச்சிருக்கேன். அதில் சின்ன நடிகர்கள், டெக்னீசியன்கள், டான்ஸர்கள் யார் இறந்தாலும் அவர்களது ஈமச்சடங்கினை எவ்வளவு செலவு ஆனாலும் நான் செய்ய ரெடியாக இருக்கிறேன்.

இந்த டிரஸ்ட்டுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய கோவையைச் சேர்ந்த அண்ணன் ராபினை நான் பாராட்டியே ஆகணும். அவர் என்னிடம் எப்படிங்க இதை நடத்தப்போறீங்க அப்படின்னு கேட்டார். நான் என் கலைஞர்கள் இருக்காங்க அப்படின்னு சொன்னேன். ஒவ்வொருத்தரும் ரூ.500, ரூ.1000 செலுத்தினால் கூட சில லட்சம் சேரும்ணேன்னு அவங்ககிட்ட சொன்னேன். அதை வைச்சுக்கிட்டு செய்வேன்னு சொன்னேன். அப்போது கவலைப்படாதீங்க பெஞ்சமின், கடவுள் இருக்கிறார். நான் பத்துலட்ச ரூபாய் தருகிறேன்னு சொல்லி உற்சாகப்படுத்தினார். இந்த விழாவுக்காக ஃபிளைட் பிடிச்சு வந்திட்டார். அதுமட்டுமில்லாமல், போண்டா மணி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் தர உறுதி கொடுத்திருக்கார். அத்தகைய நல்ல மனிதன், நல்ல இதயம் எங்கள் ராபின் அண்ணன். போண்டா மணி குடும்பத்துக்கு இரண்டரை ஆண்டுகளாக உதவி செய்துகொண்டு இருக்கிறார். அவர் யாருன்னு தெரியாது. வலது கை தருவது இடது கைக்குத் தெரியக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படி, எத்தனையோ நொடிந்த சினிமா கலைஞர்களுக்கு ராபின் அண்ணன் உதவியிருக்காங்க. அவரிடம் உதவியைப் பெற்ற எல்லோருக்கும் ராபின் அண்ணனை தெரியும். அத்தகைய நல்ல இதயம் இந்த டிரஸ்ட்டுக்கு உதவியிருக்கு’’ என்றார், நடிகர் பெஞ்சமின்

அப்போது அவரிடம் இருந்து மைக்கை பெற்ற நன்கொடையாளர் ராபின், ‘நான் கருவி மட்டும் தான். அதைச் செய்யச் சொன்னது ஆண்டவர். இருக்கிறவரை நம்மால் முடிந்ததைப் பிறருக்கு செய்யணும். எப்போது உயிர்போகும்னு தெரியாது. நைட் படுத்து தூங்கிட்டு காலையில் எழும்போதுதான் உயிரோடு இருக்கிறதை உணர்வோம். அதனால், வாழும் நாட்களை நேசிங்க. பிறருக்கு உதவியாக இருங்க. போகும்போது நாம் ஒன்னுமே கொண்டுபோக போறது இல்லை. நான் கிராமத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வரும்போது வெறும் பஸ் டிக்கெட்டுக்குண்டான காசோடு மட்டும் தான் வந்தேன். இன்னைக்கு பலகோடி ரூபாய் உதவி செய்ய வைக்கிறார் என்றால் ஆண்டவர் ஒருத்தரால் தான்’ என்றார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.