Actress Meena: நடிகை மீனாவோட அம்மா யாருன்னு தெரியுமா? தமிழ் சினிமாவுல அவங்க பெயர் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Meena: நடிகை மீனாவோட அம்மா யாருன்னு தெரியுமா? தமிழ் சினிமாவுல அவங்க பெயர் தெரியுமா?

Actress Meena: நடிகை மீனாவோட அம்மா யாருன்னு தெரியுமா? தமிழ் சினிமாவுல அவங்க பெயர் தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Jan 27, 2025 02:29 PM IST

Actress Meena: நடிகை மீனாவை நமக்கு குழந்தை நட்சத்திரமாக இருந்தே தெரியும். ஆனால், அவரது அம்மாவைப் பற்றியம் அவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தது பற்றி தெரியுமா உங்களுக்கு?

Actress Meena: நடிகை மீனாவோட அம்மா யாருன்னு தெரியுமா? தமிழ் சினிமாவுல அவங்க பெயர் தெரியுமா?
Actress Meena: நடிகை மீனாவோட அம்மா யாருன்னு தெரியுமா? தமிழ் சினிமாவுல அவங்க பெயர் தெரியுமா?

நடிகை மீனா பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது குடும்பம் பற்றிய தகவல்கள் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில், அவர் மீனா மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி பல தகவல்களை கூறியுள்ளார்.

மீனா பற்றி பரவும் வதந்தி

அந்தப் பேட்டியில், மீனா தற்போது 300 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி இருப்பதாக பலரும் பொய்யான தகவல்களை பலரும் பரப்பி வருகின்றனர். ஆனால் அவர் அப்படி எதுவும் சொத்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை. 300 கோடிக்கு சொத்து வாங்கினால், அதற்கு 100 கோடிக்கும் மேலாக வரி மட்டுமே செலுத்த வேண்டும் எனத் தெரியுமா?

பணம் சேமிப்பு

இப்போதைக்கு மீனாவுக்கு எதுக்கு சொத்து. ஒரே ஒரு மகள் தான் இருக்கு. அந்தப் பெண்ணும் படிச்சிட்டு இருக்கு. அந்தப் பொன்னும் எதிர்காலத்துல நடிகையாக வரத் தான் வாய்ப்பு இருக்கு. அதுவரைக்கும் இருக்க பணத்த எல்லாம் பிளாக்ல வச்சிருப்பாங்களா? இல்ல சொத்து வாங்கி ஒயிட் ஆக்குவாங்களா?

நடிக்க விரும்பாத மீனா

இப்போ மீனா சினிமாவுல நடிக்குறது இல்ல. வர்றவங்க எல்லாம் அக்கா அண்ணி கேரக்டரா குடுக்குறாங்க. அதுனால அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இப்போ அவங்களுக்கு எந்த பணத்தேவையும் இல்ல. அதுனால அவங்க நடிக்கவும் விருப்பப்படல. அதுவும் இல்லாம அவங்க தனியா பிஸ்னஸ் பன்ற மாதிரியும் தெரியல. அவங்களுக்கு சொத்தே அதிகமா இருக்கு. அப்புறம் அவங்க ஏன் மத்தவங்ககிட்ட கையேந்தனும்.

மீனாவோட அம்மா அப்போவே அப்படி

மீனாவோட குடும்பமே சினிமா பிண்ணனி கொண்டது தான். மீனாவோட அம்மா, சித்தி ரெண்டு பேருமே சினிமாக்காரங்க தான். இவங்க ரெண்டு பேரும் டைரக்டர் கர்ணன் படத்துல கவர்ச்சி வேடம் பண்ணுனாங்க. கதாநாயகிகளைத் தாண்டி அதிகம் கவர்ச்சி காட்டிய ராஜ் மல்லிகா, ராஜ் கோகிலா தான் இவங்களோட அம்மா, சித்தி. பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவுல இவங்கள 'செக்ஸ் பாம்' அப்டின்னு கூப்டுவாங்களாம். இவங்க நடிச்சது எல்லாமே தமிழ் படம் தான்.

குடும்பப்பாங்கான மீனா

அம்மாவும் சித்தியும் நடிகைங்களால ராஜ்கிரண் படத்துல ஹீரோயின் தேவைப்பட்டதால மீனாவ நடிக்க வரவச்சாங்க. ஆனா, மீனா அவங்க அம்மா, சித்தி மாதிரி எல்லாம் இல்லாம குடும்பபாங்கான நடிகையாக இருந்தார். கமல் கூடவே நடிச்சாலும் முத்தக் காட்சியில் நடிக்காத ஒரே நடிகை அவங்க தான்" என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.