Bayilvan: பகலில் அண்ணா... இரவில் அத்தான்... எல்லா ஆதாரமும் இருக்கு.... இதவச்சு சம்பாதிக்குறேன்… ஃபார்மில் பயில்வான்
Bayilvan: நடிகைகள் பலர் தங்கள் பட வாய்ப்புக்காக சிலரை அண்ணா என அழைத்துவிட்டு பின் இரவில் அத்தான், மாமா என கூறுகின்றனர். இவை அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது எனக் கூறி பயில்வான் ரங்கநாதன் சினிமா வட்டாரத்தில் தற்போது புயலைக் கிளப்பியுள்ளார்.
தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது புயலைக் கிளப்பும் அளவு எக்கச்சக்க செய்திகளை அள்ளித் தருபவர்கள் என்றால் அது பயில்வான் ரங்கநாதனும், பாடகி சுசித்ராவும் தான். இவர்கள் வாயைத் திறந்தாலே அது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தான் ஏன் இதுபோன்ற வீடியோக்களை போடுகிறேன் என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சினிமாவில் தனிமனித ஒழுக்கம் என்பது 100க்கு 99 பெர்சன்ட் கூட இல்லை. இங்கு நான் சொல்லும் அனைத்து விஷயங்களுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது நடிகைகள் வாய்ப்புகளுக்காக சோசியல் மீடியாவில் ஆபச புகைப்படங்களை பதிவு செய்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி நான் பேசினால் தவறா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார். இந்நிலையில், பயில்வான் பேசி வைரலாகி வரும் வீடியோவில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
இவங்க தான் என் டார்கெட்
சினிமாவில் உள்ள அனைவரையுமா நான் விமர்சிக்கிறேன்? தனி மனித ஒழுக்கம் என்பதே இல்லாதவர்களைத்தானே நான் விமர்சிக்கிறேன்? தனிமனித ஒழுக்கம்ன்னா என்ன? ஒவ்வொரு மனிதனும் உண்மையோடும் மனசாட்சியோடும் வாழ வேண்டும் அப்படிங்குறது தான.
ஆனா சினிமாவில, தனி மனித ஒழுக்கம்ங்கிறதே 100க்கு 99 சதவீதம் கூட இல்லை. நான் யாரப் பத்தி பேசினாலும், அதுக்கான ஆதாரத்துடன் தான் பேசுவேன். அவங்க அனுபவிச்சதைத் தான் பேசுவேன். நான் பார்த்ததை தான் பேசுவேன். சினிமாவில் இருந்துட்டு, நீங்களே இப்படி சினிமாவை பேசலாமா?ன்னு நிறைய பேர் கேக்குறீங்க. சினிமாவில் இருந்தால், நான் அந்த குறையை சொல்றேன். ஏன் அதை நான் சொல்லக் கூடாதா?
நீங்க செஞ்சா சரி நான் செஞ்சா தப்பா?
வாய்ப்புக்காக எத்தனையோ நடிகைகள், தங்களோட ஆபாசப் படங்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்யுறாங்க. இது தனி மனித ஒழுக்கமா? ஆபாச படங்களை தாங்களே வெளியிடுவது தவறில்லை, ஆனால், நான் சொல்வது மட்டும் தவறா? அண்ணே அண்ணே என்று சொல்லிட்டு, இரவில் அத்தான், மாமான்னு எத்தனையோ பேர் மாறிடுறாங்க. விடுவார்கள். இதை நான் சொல்லல மூத்தவர் ஒருத்தரே சொல்லியிருக்காரு.
கம்பரசம்ங்குற புக்கை அண்ணா எழுதினாரு. அதிலென்ன கம்பராமாயணத்தை குறையா சொன்னாரா? இல்லை ராமரை குறை சொன்னாரா? ராமாயணத்தில் உள்ள காம விசயங்களை மட்டும் தான சொல்லியிருந்தார். அந்த புக்கு லட்சக்கணக்குல தான வித்தது.
நான் இதவச்சு சம்மாதிக்குறேன்
டேன்ஸ் மாஸ்டர் கலா என்னப்பத்தி ஒரு வீடியோ போட்டுருந்தாங்க. அந்த வீடியோவை 300 பேர் தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால், நான் பேசியதை லட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். நீங்கள் டான்ஸ் ஆடி சம்பாதிக்கிறீங்க. நாங்க யூடியூப்பில் பேசுறோம். எல்லாம் ஒன்னு தானே என தன் பக்க நியாயத்தை கூறியுள்ளார்.
மேலும், சினிமாவில இருக்க எல்லாருமே தப்பானவங்க கிடையாது. ஆனந்தராஜ், நதியா மாதிரி சில பேர் விதிவிலக்கானவங்களும் இன்னமும் இருக்காங்க. எத்தனையோ நடிகைகளும் நடிகர்களும், தங்களோட வாரிசை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பவில்லை. இதுக்கெல்லாம் காரணம், அவங்க வாழ்க்கையில் சந்தித்த அனுபவம் தான் எனவும் கூறியுள்ளார்.
இது தொடரும்
அத்துடன், தனி மனித ஒழுக்கம் இல்லாத நடிகர்கள், நடிகைகள் குறித்து நான் பேசுவது தொடரும். அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். என்னை நீங்கள் குறை சொன்னால், குறை சொல்பவர்களின் 4 விரல்களும் அவர்களையே குறை சொல்லும் என காட்டமாகவும் கூறியுள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதையடுத்து, பயில்வான் 2.0 என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.