அடாவடியாக பேசிய அப்பாஸ்.. படப்பிடிப்பில் அடிக்க பாய்ந்த நடிகர் - என்ன தான் நடந்தது?
ஆனந்தம் படத்தில் நடித்த பாவா படப்பிடிப்பு தளத்தில் அப்பாஸ் செய்த விஷயத்தைப் பற்றி பேசி உள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் உருவான ஆனந்தம் படம், 2001 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா, விஜயகுமார் மற்றும் ஷியாம் கணேஷ் ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார். இப்படம் ஃபாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே இந்த படத்தில் நடித்த பாவா படப்பிடிப்பு தளத்தில் அப்பாஸ் செய்த விஷயத்தைப் பற்றி பேசி உள்ளார். அவர் கூறுகையில், “ஆனந்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவ்வளவு பெரிய மெகா ஸ்டாரே 6.30 மணிக்கு எல்லாம் வந்துவிடுவார்.
அப்பாஸை அடிக்க சென்ற பாவா
ஆனால் அப்பாஸ் மட்டும் 8 மணி தாண்டியும் வரவே இல்லை. இதில் நான்கு அண்ணன், தம்பிகள் பாத்திரம் இருப்பதால் ஒருவர் விட்டு ஒருவர் என்று எடுக்க முடியாது. அனைவரும் இருந்தால் தான் அந்த சீனே எடுக்க முடியும்.
அதனால் நான் அப்பாஸ் வந்ததும் என்ன கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் அப்படி தான் வர முடியும் என்று சொன்னார். அப்போ நான் அவர அடிக்கவே போய்ட்டேன். அதற்கு பிறகு தான் அவர் ஒழுங்கா வந்தார்.” என்றார்.
ஆனந்தம் படத்தில், பாவா ஒரு திருடனாக வந்து அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாறி படம் முழுக்க பயனம் செய்வார். அவர்களின் பாசத்தால் அந்த குடுபத்திற்கு கடைசி வரை விஸ்வாசியாக பயணம் செய்வார். ஆனந்தம் இவருக்கு இரண்டாவது படமாகும். கடைசியாக இவர் நடித்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வரன் படம்.
ஆனந்தம் கதை உருவானது எப்படி?
ஆனந்தம் தனது வாழ்க்கையின் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டதாக படத்தின் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்திருந்தார். இந்த சம்பவங்களை படத்தின் தயாரிப்பாளர்களிடம் லிங்குசாமி கூறியபோது, அவர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மம்முட்டியின் மனைவி மற்றும் குடும்பத்தில் மூத்த மருமகள் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ரம்யா கிருஷ்ணனும், சௌந்தர்யாவும் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வேடத்தில் தேவயானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். சுவாரஸ்யமாக, முரளியின் மனைவி கதாபாத்திரத்தில் தேவயானி முதலில் பரிசீலிக்கப்பட்டார், ஆனால் கண்ணுக்கு கண்ணகாவில் அண்ணன் தம்பியாக நடித்ததால் இருவரும் தயக்கம் காட்டினர். பின்னர் முரளியின் மனைவி வேடத்தில் ரம்பா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனந்தம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் தெலுங்கு பதிப்பை முப்பலனேனி சிவா இயக்கியதோடு, ரீமேக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சோப் ஓபரா படத்தை அடிப்படையாகக் கொண்டது.
லிங்குசாமி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வைத்துதான் அவரின் முதல் திரைப்படமான ஆனந்தம்’ படத்தை இயக்கினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.