தபிடி திபிடி ஆபாச ஸ்டெப்.. மகள் வயதுடைய நடிகையுடன் இப்படியா.. பாலய்யாவை வறுக்கும் நெட்டிசன்கள்
தபிடி திபிடி ஆபாச ஸ்டெப்.. மகள் வயதுடைய நடிகையுடன் இப்படியா.. பாலய்யாவை வறுக்கும் நெட்டிசன்கள்
தபிடி திபிடி ஆபாச ஸ்டெப்.. மகள் வயதுடைய நடிகையுடன் இப்படியா.. பாலய்யாவை வறுக்கும் நெட்டிசன்கள் குறித்துப் பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா. இவர் டகு மகாராஜ் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
பாபி கொல்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அனிமல் படத்தின் வில்லன் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் டகு மகாராஜ் படத்தில் 'டபிடி திபிடி' பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இதில் பாலகிருஷ்ணாவுடன் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா வித்தியாசமாக குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்தப் பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஆனால், தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரோலை எதிர்கொண்டு வருகிறது. அதற்குக் காரணம் பாடலில் பாலய்யா ஆடும் ஸ்டெப்ஸ் தான்.
இந்த தபிடி திபிடி பாடலின் பாடலில், பாலகிருஷ்ணா நீல நிற சட்டை, பழுப்பு நிற பேன்ட் மற்றும் சன்கிளாஸில் ஒரு ராஜாவைப் போல களத்தில் குதிக்கிறார். ஊர்வசி ரவுத்தேலா க்ராப் டாப் மற்றும் ஸ்கர்ட்ஸ் அணிந்து செக்ஸியாக இருக்கிறார்.
இருப்பினும், ஊர்வசி ரவுத்தேலா பாலய்யாவை, இடுப்பு முதல் பிட்டம் வரை கைகளால் அடித்து ஸ்டெப் போடுகிறார். இது மிகவும் ஆட்சேபனைக்குரியதாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர்.
அநாகரிக நடனம்:
நடிகர் பாலகிருஷ்ணா ஊர்வசியை முதுகில் இருந்து இப்படி அடிப்பதைப் பார்க்கும் போது, இதெல்லாம் ஒரு ஸ்டெப்பா என தபிடி திபிடி பாடலுக்கு ஸ்டெப் போட்ட மாஸ்டர் சேகரை ட்ரோல் செய்கின்றனர்.
மேலும், 64 வயதான பாலகிருஷ்ணா 30 வயதான ஊர்வசியுடன் நடனம் ஆடும் அநாகரிக நடனம், மகள் வயதுடன் இப்படியா ஆடுவது என விமர்சனங்களைக் குவித்துள்ளன. மேலும், அவர் ஹீரோவாக மட்டுமின்றி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பதால் படங்களிலும் பொறுப்புடன் நடிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்துரைக்கின்றனர்.
நெட்டிசன்கள் கருத்து:
இதுதொடர்பாக, "இளம்பெண் தனது தாத்தாவுடன் நடனமாடுகிறாள்" என்று ஒரு பயனர் எழுதியிருந்தார். மேலும் இன்னொரு பயனர், "இது மோசமான நடனம். நீங்கள் உண்மையிலேயே பாலகிருஷ்ணாவின் நலம் விரும்பியாக இருந்தால் தயவுசெய்து பாடலை நீக்கிவிட்டு ரீஷூட் செய்யுங்கள்" என்றார்.
மேலும் இன்னொரு நெட்டிசன், ‘’ பேத்தி வேடத்திற்கு எப்போதும் வட இந்திய நடிகைகளை தேர்வு செய்யுங்கள். ஆனால், எங்கள் வட இந்திய இயக்குநர்கள் அதைச் செய்வதில்லை’’ எனக் கருத்துரைத்தார்.
முன்பே இப்படி ட்ரோல்களைப் பெற்ற ரவி தேஜா:
இதற்கிடையில், ரவி தேஜா இதற்கு முன்பு இதுபோன்ற ட்ரோல்களை எதிர்கொண்டார். மிஸ்டர் பச்சன் படத்தின் சிதார் பாடலில், கதாநாயகி பாக்யஸ்ரீ போர்ஸுடன் இப்படி ஒரு ஸ்டெப் ரவி தேஜாவுக்கு அமைந்தது. அப்போதும் வயது வித்தியாசம், நடன அசைவுகள் பற்றி ட்ரோல் வந்தது. அதை மறைக்க முயன்றார் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர். இப்போது பாலகிருஷ்ணா தபிடி திபிடி பாடலில், அத்தகைய ட்ரோலை எதிர்கொள்கிறார்.
புஷ்பா 2:
புஷ்பா 2 படத்திலும் 'பீலிங்ஸ்’ பாட்டில் இதே போன்ற ஆபாச ஸ்டெப்ஸ் இருப்பதாக பேச்சு அடிபட்டது. இருப்பினும், கணவன் மனைவிக்கு இடையிலான பாடல் என்பதால், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் வயது வித்தியாசம் அதிகம் இல்லை என்பதால், ட்ரோல் செய்யப்படவில்லை. பீலிங்ஸ், தபிடி திபிடி ஆகிய இரண்டு பாடல்களுக்கும் மாஸ்டர் சேகர் நடன இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.