Actor Bala: 'கிஃப்ட் தரேன்னு சொல்லி கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டாரு'- பாலா மனைவி கோகிலா ஷாக் பேட்டி
Actor Bala: நடிகர் பாலா கிஃப்ட் தருவதாக சொல்லி தனக்கு தாலி கட்டிவிட்டார் என அவரது மனைவி கோகிலா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி ஷாக் ஆக்கியுள்ளார்.

Actor Bala: சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா, அவரது மாமா மகள் கோகிலாவை சமீபத்தில் திருமணம் செய்தது பெரும் பேசுபொருளான நிலையில், அவர்களது திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு பாலாவும் அவரது மனைவி கோகிலாவும் பேட்டி அளித்துள்ளனர்.
சொர்க்கத்துல வாழுறேன்
அந்தப் பேட்டியில், "பத்திரிகையில எல்லாம் எனக்கு 4வது கல்யாணம்ன்னு போட்டாங்க. அப்படி எல்லாம் போட்ருக்க கூடாது. இது எனக்கு 5வது கல்யாணம்ன்னு போட்ருக்கனும். நம்ம கைய மீறி சில விஷயம் நடந்தா பாத்து சிரிச்சிட்டு போயிடணும். ஆனா, கோகிலா சட்டப்படி 2வது மனைவி தான். நாங்க இந்த கல்யாணத்துல ரொம்ப சந்தோஷமாக இருக்கோம். சொர்க்கத்துல வாழுற மாதிரி இருக்கு.
கோகிலா என் மாமா பொன்னு, அவ எனக்கு 3 வயசுல இருந்தே தெரியும். எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை எல்லாம் இருந்தது எல்லாருக்கும் தெரியும். ஆனா, இவ என்ன லவ் பண்ணின விஷயம் எனக்கு தெரியாது. வாழ்க்கையில சில விஷயம் வந்துட்டு போயிடுச்சு. நான் யாரையும் குத்தம் சொல்ல விரும்பல. அந்த மாதிரியான சமயத்துல தான் எனக்கு இவங்க என்ன லவ் பண்றதே தெரியும்.
எங்க அம்மா சொன்ன பதில்
இத நான் எங்க அம்மாட்ட சொல்றேன், அப்புறம் நான் சின்ன வயசுல இருந்து பாத்து வளர்ந்த பொன்னு. எப்படி இவள மனைவிங்குற கண்ணோட்டதுல பாக்குறதுன்னு கேக்குறேன். அதுக்கு எங்க அம்மா, பாலா உங்க அப்பாவ நான் இஷ்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணுனேன்னு நெனச்சியான்னு கேட்டாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க வாழ்ந்து வந்த அன்பின் வெளிப்பாடு தான் நீங்க எல்லாம்ன்னு சொன்னாங்க.
தாலி கட்ட போறேன்னே தெரியாது
அப்புறம் இவங்க வந்தாங்க. எனக்கு ஒரு தாயோட அன்பு கிடைச்சது. எங்களுக்கு சட்டப்பூர்வமா கல்யாணம் நடந்தது 3 மாசம் முன்னாடி தான். கேரளால ஞாயிற்று கிழமை எல்லாம் நகைக்கடை திறக்க மாட்டாங்க. அப்போ நான் சனிக்கிழமை முடிவு பண்றேன். ஞாயிற்று கிழமை கடைய திறந்து தாலி வாங்கிட்டு போறேன். நான் தாலி கட்டப் போறேன்னு இவங்களுக்கே தெரியாது என்றார்.
கிஃப்ட் தரேன்னு சொல்லி தாலி கட்டிட்டாரு
அப்போது பேசிய கோகிலா, "ஏன்னா கேரளா தாலி வேற மாதிரி இருக்கும். தமிழ்நாட்டு தாலி வேற மாதிரி இருக்கும். வீட்டுக்கு வந்து ஒரு கிஃப்ட் வாங்கிருக்கேன்னு சொல்லி சாமி கிட்ட கூட்டிட்டு போனாரு. அப்போ திடீர்ன்னு தான் தாலி கட்டிட்டாரு. இது யாருக்கும் தெரியாது. திடீர்ன்னு நடந்த கல்யாணம்" என்றார் புன்னகையுடன்.
தொடர்ந்து பேசிய பாலா, நான் போன வருஷம் ஆபரேஷன் பண்ணி படுத்த படுக்கையா இருந்தப்போ எனக்கு தப்பான மருந்து கொடுத்துட்டாங்க. அது தெரியாமயே நான் அத சாப்பிட்டுட்டு இருந்தேன். அப்போ ஹாஸ்பிட்டல்ல என்ன பாத்துக்க வந்தது கோகிலா தான். அவளுக்கு என்கூடவே இருக்கணும்ன்னு ஆசை. ஆனா எனக்கு நான் தூக்கி வளர்த்த பிள்ளைய கல்யாணம் பண்ண ஒரு நெருடல் இருந்தது.
நெருடல் போனது அப்போதான்
ஆனா, நான் ஹாஸ்பிட்டல்ல இருந்த 10 நாளும், ஒரு தாயால் மட்டும் செய்யக் கூடிய அத்தனை வேலையையும் எனக்காக பண்ணுனாங்க. அப்போ தான் இவங்கள என் மனைவியா ஏத்துக்குற மனசு எனக்கு வந்தது. நான் தான் இவள சின்ன பொன்னு சின்ன பொன்னுன்னு நெனச்சிட்டு இருக்கேன். ஆனா இவ உண்மையிலயே என் மேல பிரியமா தான் இருக்கான்னு அப்போ தான் புரிஞ்சது.
பின்னாடி எங்க கல்யாணம் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் இவளோட டைரி ஒன்னு சென்னையில இருந்து அனுப்ப சொல்லி சொல்றா. அதுல ஃபுல்லா எனக்காக கவிதை எழுதி வச்சிருக்கா. சின்ன வயசுல இருந்தே என் மேல இருந்த ஆசைய எல்லாம் அதுல எழுதி வச்சிருக்கா. அத எல்லாம் பாத்து நான் ஷாக் ஆகிட்டேன்" என்றார்.
நடிகர் பாலா
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா 2003-ல் வெளியான 'அன்பு' என்ற தமிழ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். 'காதல் கிசு கிசு', 'கலிங்கா' போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார். அதன் பிறகு மலையாளத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மேலும், ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் நடித்திருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்