Actor Bala: ஹாஸ்பிட்டலில் இருந்து பார்த்துக்கிட்டாள்; மரணத்தை 8 முறை அருகில் பார்த்தாச்சு.. மனைவி பற்றி நடிகர் பாலா டாக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Bala: ஹாஸ்பிட்டலில் இருந்து பார்த்துக்கிட்டாள்; மரணத்தை 8 முறை அருகில் பார்த்தாச்சு.. மனைவி பற்றி நடிகர் பாலா டாக்

Actor Bala: ஹாஸ்பிட்டலில் இருந்து பார்த்துக்கிட்டாள்; மரணத்தை 8 முறை அருகில் பார்த்தாச்சு.. மனைவி பற்றி நடிகர் பாலா டாக்

Marimuthu M HT Tamil Published Feb 15, 2025 08:57 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 15, 2025 08:57 PM IST

Actor Bala: நடிகர் பாலா தன் மனைவி கோகிலா பற்றி எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

Actor Bala: ஹாஸ்பிட்டலில் இருந்து பார்த்துக்கிட்டாள்.. மரணத்தை 8 முறை அருகில் பார்த்தாச்சு.. நடிகர் பாலா எமோஷனல் பேச்சு
Actor Bala: ஹாஸ்பிட்டலில் இருந்து பார்த்துக்கிட்டாள்.. மரணத்தை 8 முறை அருகில் பார்த்தாச்சு.. நடிகர் பாலா எமோஷனல் பேச்சு

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா, தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் முக்கிய நடிகராக இருக்கிறார்.

சமீபத்தில் கோகிலா என்னும் பெண்ணை மறுமணம் செய்துகொண்ட அவர் பிப்ரவரி 12ஆம் தேதி கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

இதுதொடர்பாக நடிகர் பாலா மற்றும் கோகிலா தம்பதியினர் அளித்த பேட்டியினைக் காணலாம்.

’பொண்ணுக்கு தாய்மாமா மேல் ஆசை இருக்கும்; பையனுக்கு அக்கா மகளை மனைவியா ஏத்துக்கிறதுக்கான அந்த ஒரு தருணம் எப்படி இருந்துச்சு?

பாலா: உண்மையாக சொல்றேங்க. நான் வந்து போன வருஷம் ஆபரேஷன் எல்லாம் முடிஞ்சு, ஒரு மருந்தை தவறாக ரொம்ப நாளாக கன்ஸ்யூம் பண்ணிட்டேன். அப்போது கடவுள் வந்து திருப்பி என்னை காப்பாத்துறாரு.

ஒரு பத்து நாள் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருந்தேன். அப்ப என் கூட இருந்து பார்த்துக்கிறாள். 10 நாள்களும் என் இரண்டு கையிலயும் வந்து டியூப்ஸ் போகுது. ஒரு அடிப்படை விசயமாக சொல்ற சாப்பாட்டில் இருந்து குளிக்கிறதுல இருந்து பாக்கி விஷயங்கள் எல்லாமே வந்து ஒரு தாயால் மட்டும்தான் பண்ண முடியும். அப்போது தான் நான் ஒரு தாரத்தை பார்த்தேன். அதனால், என் மனசுல தோணுச்சு. ஓ.கே. இவ மாமாவை பிடிக்கும்ன்னு உண்மையிலேயே தான் பேசிட்டு இருக்கான்னு புரிஞ்சது.

நான் ஏனென்றால், சின்ன பொண்ணு சின்ன பொண்ணுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனால், இவளுக்கு இருக்கும் மெச்சூரிட்டி எனக்கு கூட கிடையாதுன்னு தோணுது. எனக்கு ஓகே. இப்போது நீங்க அவருக்கு கல்யாணம் ஆகும்போது நீங்க சின்ன பொண்ணுனே வைச்சுக்கோங்க.

மாமா மேல உள்ள காதலை கண்டுபிடிச்ச ஒரு சமயம் பற்றி சொல்லுங்க?

பாலா: உங்களை விட்டு போகும்போது என் மனசு வேற மாதிரி இருக்கும். நான் நானாகவே இல்லை. அது மட்டும் எனக்கு புரியுது. இதுக்கு பேரு எனக்கு என்னன்னு தெரியல அப்படின்னு எழுதி வச்சிருந்தாள்.

கோகிலா: அது தான். எனக்கும் மாமா ஒரு கவிதை சொன்னார்.

பாலா: அதன்பின், கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு கவிதை சொன்னேன். மீண்டும் குழந்தையாகப் பிறந்தேன் பாசத்தினால் உன் கரங்களில்.

அவர் சொல்றார் இல்லையா சின்னபொண்ணுனு சொல்லி புரொபோஸ் பண்ணக்கூடாதுனு இருந்தேன்னு சொல்றார்ல. அப்போது நீங்கள் தான் காதல் புரொபோஸ் பண்ணுனீங்க?

பாலா: சின்னபொண்ணு சின்னபொண்ணுன்னு சொன்னால், எனக்கு இன்னும் ரொம்ப வயசான மாதிரி இருக்கு. எனக்கு சின்ன வயது தான். சின்ன பையன் தான் சரிங்களா!

சரி இந்த சின்ன மாமாவ நீங்க எத்தனை வயசுல இருந்து நேசிக்க ஆரம்பிச்சீங்க? சொல்லியிருக்கீங்களா?

கோகிலா: அப்படியெல்லாம் இல்லை.

பாலா: பத்து பேர் இருந்தால், சாப்பாடு எனக்கு மத்தவங்க பரிமாற விடமாட்டாள். இதுதான் கம்யூனிகேஸன்.

கோகிலா:அது எப்படி சொல்றதுன்னு தெரியல. எல்லோமே நான் தான் மாமாவுக்கு பண்ணனும்னு இருக்கும். அப்படி தான் புரியவைச்சது.

சார் சினிமாவில் இருக்காங்க. அவரை பற்றி பல விஷயங்கள் வரும்போது எப்படி எடுத்துக்குவீங்க?

கோகிலா: எனக்கு மாமாவை பற்றி தெரியும். யாரு என்ன சொன்னால் எனக்கு என்ன.நாங்க ஜாலியாகதான் எடுத்துக்குவோம்.

உங்கள் இரண்டு பேரில் யார் மெச்சூரிட்டி?

உண்மையை சொல்றேங்க. எனக்கு 42 வயது ஆகுது. இவளுக்கு 24 வயது ஆகுது. அவள் வயசை சொல்லக்கூடாதுன்னு சொல்வாள். வயதைக் கூட்டி சொல்லு மாமான்னு சொல்வாள். இதில் என்ன தப்பு இருக்கு.

உங்களுக்கு எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கு?

கோகிலா: சொல்லத் தெரியல. எனக்கு நிறைய இருக்கு.

கேரளாவில் ஒருத்தர்வீட்டுக்கு துப்பாக்கி எடுத்துட்டு போனதா சொல்றாங்களே? அது பற்றி?

பாலா: ஒருத்தர்கிட்ட அன்புடன்போய் ஒன்று கேட்டுட்டு வந்தேன். பெண்களைப் பற்றி மோசமாகப் பேசுனேன். அதெல்லாம் நமக்கு ஒத்துவராது. அதுதான் துப்பாக்கியோடு போய் கேட்டேன். நான் மரணத்தை 8 முறை அருகில் சென்று பார்த்திட்டேன். நான் 17 வயதிலேயே போக வேண்டியது. அதற்கப்புறம் எனக்கு மறு பிறவி தான். அதனால் எனக்கு அந்த பயமும் இல்லை. சமீபத்தில் கல்லீரல் எனக்கு ஃபெயிலியர் ஆகிடுச்சு. எனக்கு கல்லீரல் தானம் கொடுத்தது ஒரு கிறிஸ்டியன். ரத்தம் கொடுத்தது ஒரு முஸ்லீம். நாங்கள் இருவரும் சிவ பக்தர்கள். இதில் என்ன சொல்லமுடியும்’’ என சொன்னார், நடிகர் பாலா.

நன்றி: கலாட்டா தமிழ்

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதுகலை கட்டுமானப்பொறியியல் துறையில் பட்டம்பெற்றவர். விகடனில் 2014-15க்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். 11ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு,காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் அனுபவம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த இவரது ஊடகப்பயணம், தாலுகா நிருபர், விகடன், மின்னம்பலம், காவேரி நியூஸ் டிவி, நியூஸ் ஜெ டிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு வரை பயணிக்கச் செய்து, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் இவரை சேர்த்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். சினிமாவில் இயக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது, சிறுகதை எழுதுவது மிகப்பிடித்தமான பணிகள்!
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.