நான் 4வது திருமணம் செய்யப் போகிறேன்.. எல்லாம் என் சொத்துக்காகத் தான்.. சீறிய சிறுத்தையின் தம்பி!
எனது 250 கோடி சொத்துக்கு ஆசைப்பட்டே முன்னாள் மனைவி என் மீது தேவையற்ற பழிகளை சுமத்தி வருகிறார் என நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

தமிழில் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மேலும், ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் நடித்திருந்தார்.
பாடகியுடன் திருமணம்
மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்த பாலா, சில ஆண்டுகளுக்கு முன் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். இருப்பினும் நடிகர் பாலா, பல இடங்களில் தனது மகள் அவந்திகா குறித்து பேசி வருகிறார். அவருடைய பிரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் கூறி வருகிறார்.
பாலாவை விமர்சித்த மகள்
இதைக் கண்ட அவரது மகள் அவந்திகா, எனக்கு எனது தாய் சந்தோஷமாக இருப்பது மிகவும் அவசியம். எங்களுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து பிறர் பேசுவது அசாதாரணமாக தோன்றுகிறது. என்னுடைய தந்தை என்னை நேசிப்பதாக பல இடங்களில் கூறியுள்ளார். எனக்காக அவர் நிறைய பரிசுகள் வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், நான் அவரை நேசிக்க எனக்கு ஒரு சிறிய காரணம் கூட கிடைக்கவில்லை. அவர் குடித்துவிட்டு வந்து என் அம்மாவை அடித்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது எனக் கூறியிருந்த நிலையில், இனி உன்னை எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டேன் என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார்.
மனைவி புகாரால் கைதான பாலா
இதற்கிடையில், பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாலா என்னையும், என்னுடைய மகளையும் வழிமறித்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனையடுத்து கடவந்திரா காவல்துறை, எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர்.
என்னை சிக்க வைக்க முயற்சி
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாலா, என்னை பலரும் மிரட்டி வருகின்றனர். என் வீட்டிற்குள் கைக்குழந்தையுடன் ஒரு பெண் அனுமதியில்லாமல் நுழைந்திருக்கிறார். சிலர் என்னை ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்க வைக்க திட்டமிடுகின்றனர். இவை அனைத்தும் என்னிடம் உள்ள 250 கோடி ரூபாய் சொத்திற்காகத் தான். அதை அபகரிக்கவே என்னை சுற்றி இத்தனை விஷயங்களும் நடக்கின்றன.
அடுத்த திருமணம்
இதை இப்படியே விட முடியாது. நான் அடுத்த திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தைகள் என வாழப் போகிறேன் என கூறியுள்ளார்.
இவர் தன்னை திருமணம் செய்யும் முன்பே பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தததாகவும், அதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாவும் அம்ருதா முன்னதாக குற்றம் சாட்டினார்.
இது இப்படி இருக்க நடிகர் பாலா தற்போது திருமணம் செய்தால் அது அவரின் 4வது திருமணம். இவர் சமீபத்தில் அவருடைய அத்தை மகளின் பிறந்தநாளை வெகுவாக கொண்டாடியதால், அவரைத் தான் திருமணம் செய்யப் போகிறாரோ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டாபிக்ஸ்