'வாழ்க்கையில மறக்க முடியாத 20 நிமிஷம்.. தந்தையின் மரணம் தந்த வலி..' பாரத்தை இறக்கி வைத்த அதர்வா முரளி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'வாழ்க்கையில மறக்க முடியாத 20 நிமிஷம்.. தந்தையின் மரணம் தந்த வலி..' பாரத்தை இறக்கி வைத்த அதர்வா முரளி

'வாழ்க்கையில மறக்க முடியாத 20 நிமிஷம்.. தந்தையின் மரணம் தந்த வலி..' பாரத்தை இறக்கி வைத்த அதர்வா முரளி

Malavica Natarajan HT Tamil
Dec 14, 2024 04:19 PM IST

தன் தந்தை முரளியின் மரணம் குறித்து நடிகர் அதர்வா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

'வாழ்க்கையில மறக்க முடியாத 20 நிமிஷம்.. தந்தையின் மரணம் தந்த வலி..' பாரத்தை இறக்கி வைத்த அதர்வா முரளி
'வாழ்க்கையில மறக்க முடியாத 20 நிமிஷம்.. தந்தையின் மரணம் தந்த வலி..' பாரத்தை இறக்கி வைத்த அதர்வா முரளி

நடிகர் முரளியின் மரணம்

இந்நிலையில், நடிகர் அதர்வா, மதன் கௌரியின் ஓஎம்ஜி ஷோவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அதர்வா, தன் தந்தையின் மரணம் குறித்து பேசி தன் மன பாரத்தை இறக்கி வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில், "எங்க அப்பா மத்தவங்க சொல்ற மாதிரி பல பிரச்சனைகளால எல்லாம் இறந்து போகல. அது திடீர்ன்னு நடந்துருச்சி. எங்க அப்பா நைட் 2 மணிக்கு மேல தான் இறந்திருக்காரு எ. ஆனா நான் அன்னைக்கு காலைல 5 மணி வரைக்கும் தூங்காம தான் இருந்தேன் என்றார்.

என்ன நடந்ததுன்னே தெரியல

என்னோட அப்பா ரூம்க்கு அடுத்து தான் என்னோட ரூம். அப்பா இறந்த அப்போ எங்க வீட்ல ஒரு விஷேஷம். அப்போ சொந்தகாரங்க எல்லாம் எங்க வீட்ல இருந்தாங்க. அவங்ககிட்ட எல்லாம் பேசிட்டு இருந்ததால தூங்க லேட் ஆச்சு. அவங்களும் ஊருக்கு காலையில கெளம்புறேன்னு சொன்னதால அவங்கள எல்லாம் அனுப்பி வச்சிட்டு அப்போ தான் தூங்க போனேன். நான் தூங்க போன ஒரு அரை மணி நேரத்துலயே என் ரூம் கதவ யாரோ தட்றாங்க. நைட் புல்லா தூங்காம இருந்ததால் எனக்கு அப்போ என்ன நடக்குதுன்னே தெரியல.

வீட்ல யாரும் இல்ல

அப்பாக்கு என்னமோ ஆச்சுன்னு எங்க அம்மா என்ன கூட்டுறாங்க. எங்க அம்மாவ முதன்முதல்லா இப்படி ஒரு கோலத்துல அப்போ தான் பாக்குறேன். முதல் மாடில அப்பாவோட ரூம் இருக்கு. இப்போ என்னன்னா நான் தான் எங்க அப்பாவ தூக்கிட்டு ஹாஸ்பிடல் வரைக்கும் போகனும். வீட்ல யாருமே இல்ல. அம்மாக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல.

நான் அப்பாவ போய் பாக்கும் போது, எனக்கு எல்லாம் இருண்டுருச்சி. நான் எதுவும் பண்ணல. நேரா என் ரூம் பாத்ரூமுக்கு போய் 2 நிமிஷம் அமைதியா உக்காந்து இருக்கேன். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அப்படியே இருக்கேன்.

16 வயசுல இது ரொம்ப கஷ்டம்

அப்புறம் வெளிய வந்து நான் எங்க அப்பாவ தூக்க ட்ரை பண்றேன். ஒரு 16 வயசு பையனால எப்டி இது முடியும். நான் சாதாரண நாள்ல கூட என் அப்பாவ தூக்குனதே இல்ல. ஆனா இப்போ அவரு சுய நினைவு இல்லாம இருக்காரு. அவர நான் எவ்ளோவோ கஷ்டப்பட்டு மாடில இருந்து கார்க்கு கொண்டு வரேன்.

அப்புறம் அப்பாவ சீட்ல சாய்ச்சு உக்கார வச்சு, நான் தான் வண்டிய ஓட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போரேன். அப்போ ஆம்புலன்ச கூப்டணும்ன்னு கூட தோனல எங்களுக்கு. அப்பாவ எப்படியாவது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் அதுதான் எங்க ரெண்டு பேரோட கவனமும் இருந்தது.

வாழ்க்கையில மறக்க முடியாத 20 நிமிஷம்

அப்பாவ தூக்கிட்டு வரும் போது எனக்கு லைட்டா சந்தேகம் வந்தது. இருந்தாலும், நான் வளசரவாக்கத்துல இருந்து ராமசந்திரா ஹாஸ்பிட்டலுக்கு போறேன்.

நான் ஹாஸ்பிட்டல் போர வரைக்கும் இருந்த அந்த 20 நிமிஷம் வாழ்க்கையில யாருக்கும் வரவே கூடாது. அந்த 20 நிமிஷம் மாதிரியான மோசமான மனநிலை எனக்கு வந்ததே இல்ல. அத கடந்து போகுறது அவ்ளோ கஷ்டம்.

4 வருஷம் யாருட்டயும் பேசல

அவர நான் பாத்த விதம், என்ன ரொம்ப பாதிச்சிருச்சு. அவரு இறந்ததுக்கு அப்புறம் நான் குறைஞ்சது ஒரு 4 வருஷம் யார்கிட்டயும் அப்பாவ பத்தி பேசுனதே இல்ல. இத பத்தி பேசக்கூடாதுன்னு எதுவும் இல்ல. ஆனா, இது என்ன ரொம்ப கஷ்டபப்டுத்துற விஷயமா மாறிடுச்சு.

அந்த விஷயத்த பத்தி நினைச்சாலே என்னையும் அறியாம என் மைண்ட்ல என்னோட அம்மா, அக்கா, தம்பி எல்லாரும் நியாபகம் வந்துடுறாங்க. அவங்க இந்த சூழ்நிலைய எப்படி கடந்து போவாங்க அப்டிங்குற கேள்வி எனக்குள்ள திரும்ப திரும்ப வர ஆரம்பிச்சிடுச்சு. அதுக்கு அப்புறம் எங்க அம்மா, எங்களுக்கு அப்பாவாவம் இருந்தாங்க. அவங்க மனசு அளவுல ரொம்ப உறுதியா மாறிட்டாங்க' எனக் கூறினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.