Ashok Selvan: பொன்னுங்க சைட் அடிக்குற விதமே தப்பு.. அசோக் செல்வன் என்ன சொல்றாரு?
Ashok Selvan: இன்றைய காலத்தில் பெண்கள் எல்லாம் சைட் அடிக்கும் விதமே தவறாக உள்ளது என நடிகர் அசோக் செல்வன் கூறியுள்ளார்,

Ashok Selvan: தமிழ் சினிமாவின் செல்வாக்கு பெற்ற நட்சத்திர ஜோடிகளில் ஒந்றாக திகழ்பவர்கள் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி. இவரகள் காதல், கல்யாணம், அதற்கு பின்னான உறவு குறித்து பல்வேறு சுவாரசியமான கருத்துகளும் தகவல்களும் உள்ளன.
வைரலாகும் அசோக் செல்வன்
இந்நிலையில், அசோக் செல்வன் ஐபிசி தமிழ் சேனலுக்கு கொடுத்த வீடியோ ஒன்று இப்போது ட்ரெண்டாகி வருகிறது. வாழ்வில் மக்களுக்கு முக்கிய கட்டமாக நினைப்பதே கல்யாணத்தை தான். காதல், கல்யாணம், குடும்ப வாழ்க்கை தான் மனிதனின் வாழ்நாளாகவே கழிகிறது. அப்படி இருக்கையில், அழகு குறித்து அசோக் செல்வன் பேசிய காணொலி தான் இந்த வைரலுக்கு காரணம்.
பக்கத்து வீட்டு பையன் தோற்றம்
அந்தப் பேட்டியில், நீங்கள் ரொம்ப ஹேண்ட்சம் அன்ட் க்யூட்டா இருக்கீங்க. ஆனா, இப்போ இருக்க சினிமா ரசிகர்களுக்கு பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருந்தா தான் பிடிக்குது.
அதுனால தான் தனுஷ், விஜய் சேதுபதி எல்லாம் ஹிட் ஆகிட்டாங்க. அதுனால உங்க அழகு உங்களுக்கு ப்ளஸ் ஆ? மைனஸ் ஆ? எனக் கேட்டார்.
என் கண்ணுக்கு இது தான் அழகு
அதற்கு பதிலளித்த அசோக் செல்வன். நீங்க எத அழகுன்னு சொல்றீங்கன்னு எனக்கு தெரியல. என் கண்ணுக்கு தனுஷ் சாரும். விஜய் சேதுபதியும் ரொம்ப அழகு. இங்க அழகுங்குறது ஒரு வகையான கண்ணோட்டம் தான். இங்க வெள்ளையா இருக்குறது எல்லாம் அழகு இல்ல. அதெல்லாம் ரொம்ப தப்பான பார்வை.
சைட் அடிக்குற விதமே தப்பு
வெள்ளையா இருந்தா அழகு. கருப்பா இருந்தா அசிங்கம்ன்னு நெனச்சு தான் பொன்னுங்க சைட் அடிக்குறாங்கன்னு சொன்னீங்கன்னா அது ரொம்ப தப்பு.
வெள்ளைங்குறது ஒரு நிறம் தான். அது அழகு இல்லங்குற பார்வையே தப்பு. இதெல்லாம் அழகு சாதன நிறுவனங்கள் நம்ப மேல திணிச்ச கருத்து. வெள்ளக்காரங்க இருக்கும் போது அடிமையா இருந்தோமே அந்த காலத்துல இருந்த நடைமுறை.
மரியாதைன்னு நெனச்சு பண்ணின அடிமை முறை
வெள்ளையா இருந்தா நம்பளையும் சார்ன்னு கூப்பிடுவாங்கன்னு நெனச்சு வந்த மரியாதை தான் அதுக்கெல்லாம் காரணம் எனக் கூறினார்,
இவரது இந்த வார்த்தை தான் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கருப்பாக இருப்பதாக கூறி வெறுக்கும் பல பெண்களுக்கு இது பதிலடி எனக் கூறி பலரும் சோசியல் மீடியாவில் அசோக் செல்வன் பேசிய வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்