DD Returns Sequel: டேய் பார்த்தா.. வா படம் பண்ணுவோம்'.. மீண்டும் இணையும் அதகள கூட்டணி.. - முழு விபரம் உள்ளே!
DD Returns Sequel: சந்தானம் நடிப்பில், கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது- முழு விபரம் உள்ளே!
DD Returns Sequel: சந்தானம் நடிப்பில், கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.இந்த திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஜூலை 7) தொடங்கியது. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும், இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.
யார் இயக்குநர்?
'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், "கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து செய்து சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்," என்றார்.
அதே ஜானர்தானா?
தொடர்ந்து பேசிய அவர், "மிக அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி, தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்க உள்ளோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்," என்று கூறினார்.
'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார் பதி கையாள, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்புக்கும் ஏ ஆர் மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர். திரை உலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் பூஜை இன்று நடந்த நிலையில் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.
ஆர்யா சந்தானம் கூட்டணி
நடிகர் ஆர்யா சந்தானம் கூட்டணி, முன்னதாக பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஒன்றாக நடித்தனர். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் சாதனை செய்தது. அதை தொடர்ந்து அந்த கூட்டணி, சே ட்டை, ராஜா ராணி, வி. எஸ். ஒ. பி உள்ளிட்ட திரைப்படங்களில் ஒன்றாக இணைந்தது. இந்த கூட்டணிக்கு மக்களிடமும் நல்ல வரவேற்பும் இருந்தது. இதற்கிடையே நடிகர் சந்தானம், ஹீரோவாக மாறிய நிலையில், ஹீரோக்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் முறையில் நடிகர் சந்தானத்துடன் மீண்டும் இணைந்து இருக்கிறார் ஆர்யா!
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்