2004லேயே சிக்ஸ்பேக்.. ஜிம் செய்றதை நிறுத்தச் சொன்ன பாலா சார்.. அதில் ஒரு பெர்ஷன்ட் உண்மையில்லை.. அருண் விஜய் பேட்டி
2004லேயே சிக்ஸ்பேக்.. ஜிம் செய்றதை நிறுத்தச் சொன்ன பாலா சார்.. அதில் ஒரு பெர்ஷன்ட் உண்மையில்லை என அருண் விஜய் பேட்டியளித்துள்ளார்.
வணங்கான் திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி பிறக்கப்போகிறது.
இதுதொடர்பாக வணங்கான் படத்தில் கதாநாயகனாக நடித்த அருண்விஜய் கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அவற்றின் தொகுப்பு:-
சூட்டிங்கிலும் உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவீர்களா?
சூட்டிங் போவதற்கு முன்பே, எனது டயட் ஃபுட் பற்றி டீமில் சொல்லிடுவேன். அப்படியில்லையென்றால், கேரவனில் எனக்கு என்று சமைக்க தனி சமையல் கிட் இருக்கு. அதிலேயே சமைச்சு சாப்பிட்டுடுவேன். எனக்கு சமைக்கிறது பிடிக்கும். அம்மாகிட்டயிருந்து வந்த சில நல்ல விஷயங்களில் அதுவும் ஒன்று.
2004ல் ஜனனம் படத்திலேயே நான் சிக்ஸ் பேக் வைச்சிட்டேன். அதற்கப்புறம் தடையறத்தாக்க. அப்படியே டெவலப் பண்ணிட்டே இருந்தேன்.
ரொம்ப நாளாக சிக்ஸ்பேக் வைத்திருப்பதால் அதற்காக என்ன மாதிரி உணவுக்கட்டுப்பாடு கடைப்பிடிப்பீங்க?
ரொம்பவே வீட்டில் தான் சாப்பிடுவேன். அம்மா நல்லா சமைப்பாங்க. ரஜினி சாரில் இருந்து எல்லோரும் அம்மாவின் உணவினை ரசித்து சாப்பிடுவாங்க. பிரியாணி ரொம்பப் பிடிக்கும். அம்மாவின் கையில் மீன் குழம்பு, நண்டு ரொம்ப நன்றாக செய்வாங்க, அதுவும் நம்ம ஊர் மசாலா போட்டு. மட்டன் சாப்ஸ் சாப்பிடுவேன். அதனால் அப்பப்போ, நல்லா சாப்பிடுவேன். ஒரு படம் முடிச்சிட்டு, ஒரு மாதம் பிரேக் கிடைக்கும்போது, ரொம்ப நல்லா சாப்பிடுவேன். சூட்டிங் போயிட்டால் திரும்பவும் டயட்டுக்குப் போயிடுவேன்.
வணங்கான் படத்தின் கதையை முதலில் பாலா சார் சொன்னதும், நீங்கள் ஜிம் பண்றதை நிறுத்திடுங்கன்னு சொல்லிட்டார். ஏனென்றால், அந்த பாடி லாங்குவேஜ்க்காக. இறுக்கமாக இருக்கக் கூடாது, கொஞ்சம் லூஸாக இருக்கணும், அந்த கேரக்டருக்குன்னு பாலா சார் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வருஷம்கிட்ட வொர்க் அவுட்டை விட்டாச்சு. அது கஷ்டமான விஷயம் தான். இருந்தாலும், நான் வாக் மட்டும் பண்ணிட்டு இருந்தேன். அடுத்து திரும்பவும் ஒரு மாதம் கழித்து டிரை செய்து என்னுடைய பழைய உடல்வாகை பிடிச்சிட்டேன்.
சூர்யா சார் வணங்கான் படத்தில் இருந்து விலகியதும் எந்த விஷயம் உங்களை வணங்கான் படத்தில் நடிக்க வைச்சது?
முதலில் சூர்யா சாருக்கு போன் பண்ணி பேசுனேன். அவர் எப்படி ஃபீல் பண்ணுனார்னு. அவர் ரொம்ப சந்தோஷம் அருண் நீங்க பண்ணுங்க அப்படின்னு சொன்னார்.
வணங்கான் மேக்கிங் வீடியோவில் பாலா சார் உங்கள் கன்னங்களைப் பிடிப்பார், நான் நினைச்சது எல்லாம் செய்திட்டடா அப்படிங்கிற மாதிரி? அது பற்றி உங்கள் கருத்து?
டைரக்டர் எதிர்பார்க்கிறது தானே நம்ம வேலை. பிளஸ், வணங்கான் எனக்கு ஒரு முக்கியமான படம். பாலா சார், மனதில் என்ன நினைச்சிருக்காரோ, அதைப் பண்ணிடனும்னு ஒரு விஷயம் இருக்கும். சில ரிஸ்க்கியான விஷயம் இருக்கும். இது பண்ணமுடியுமா அருண் அப்படின்னு கேட்பார். பண்ணனும்னா பண்ணிடுறேன் சார் அப்படின்னு சொல்லி நான் செஞ்சிருக்கேன்.
பாலா சார் சூட்டிங் ஸ்பாட்டில் யாரையாவது அடிச்சிருக்காரா?
அதில் ஒரு பெர்ஷென்ட் கூட உண்மையில்லை. இப்படி பண்ணனும்னு நடிச்சுக்காட்டுவார். அவர் மாதிரி ஒரு ஜாலியான பெர்ஷனை பார்க்கவே முடியாது. வணங்கான் படத்தின் முதல் பாதி காமெடியாக போகும். அதை எடுக்கும்போது விழுந்து விழுந்து சிரிப்பார். அவரைப் பத்தி தவறாக புரொஜெக்ட் ஆகியிருக்குன்னு நினைக்கிறேன்.
உங்கள் குடும்பத்தில் விருந்தினருக்கு உபசரிப்பு எப்படி இருக்கும்?
பொதுவாகவே எங்கள் வீட்டில் விருந்தினருக்கு உபசரிப்பு நல்லாயிருக்கும். எங்கள் குடும்பம் பெரிசு. ஒவ்வொருத்தவங்களும் ஒன்னு சேர்வதுதான் எங்களுக்கு பெரிசு. அதில் உணவு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்த மரியாதை, பாசம் நம்ம பசங்களுக்கும் தெரியணும். விருந்தினர்கள் ஒன்றுகூடும்போது எல்லோர் மேலேயும் குழந்தைகளுக்கு பாசம் கூடும். அதில் ஒரு கேரிங் இருக்கும்’’ என முடித்தார், அருண் விஜய்
நன்றி: கலாட்டா தமிழ்
டாபிக்ஸ்