தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Arulmani: அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வந்த நடிகர் அருள்மணி சென்னையில் காலமானார்!

RIP Arulmani: அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வந்த நடிகர் அருள்மணி சென்னையில் காலமானார்!

Aarthi Balaji HT Tamil
Apr 12, 2024 12:20 PM IST

நடிகர் அருள்மணி வியாழக்கிழமை காலமானார். கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அருள்மணி
அருள்மணி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழில் சூர்யா நடித்த சிங்கம், ரஜினிகாந்த் நடித்த லிங்கா, அழகி, தாண்டவக்கோனே என பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் அருள்மணி. அரசியல் காரணமாக கடந்த சில வருடங்களாக படங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார் அருண்மணி.

அதிமுக கட்சிப் பணி

பல ஆண்டுகளாக அதிமுக கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக கடந்த பத்து நாட்களாக அதிமுக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அருள்மணி . ஓய்வுக்காக அவர் வியாழக்கிழமை சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பிரிந்த உயிர்

சென்னைக்கு வந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அருள்மணி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதை கோலிவுட் திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது தெரிந்தது.

தேர்தல் பிரசாரம் காரணமா?

அருள்மணியின் மரணம் தமிழ் சினிமாவில் சோகத்தின் நிழல் படிந்து உள்ளது. தேர்தல் பிரசாரம் தான் அவரது உயிரை பறித்தது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இதற்கும் தேர்தல் பிரசாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள். தேர்தலில் வாக்காளர்களை கவர சினிமா நடிகர்களை கட்சிகள் பயன்படுத்துவதாகவும், இது சரியான முறையல்ல என்று நெட்டிசன்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு பயிற்சி பெற்ற அருள்மணி, பல தமிழ் படங்களில் வில்லனாக நடித்தார் . அழகி, தென்றல், அருமஜல் என 4 படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்துள்ளார். சூர்யா நடித்த சிங்கம், ரஜினிகாந்த் நடித்த லிங்கா, சூர்யா 2 ஆகிய படங்களில் வில்லன் கும்பல் உறுப்பினராக நடித்து இருக்கிறார் அருள்மணி.

அருள்மணி நடிகராக மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு பலருக்கும் உத்வேகமாக திகழ்ந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அருள்மணி சில காலம் இயக்கப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்தார்.

கடந்த மாதம், நடிகர் டேனியல் பாலாஜி தனது 48 வயதில் மாரடைப்பால் இறந்தார். அவரின் திடீர் மரணம் தமிழ் திரையுலகைச் சேர்ந்த ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஊடகச் செய்திகளின்படி, டேனியல் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் முயன்றும் டேனியல் பாலாஜியால் உயிர் பிழைக்க முடியவில்லை.

மாரடைப்பு மரணங்கள் சமீபகாலமாக திரையுலகத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இன்னும் மாரடைப்பால் இறக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. பிரபலங்கள் தங்களது உடல் நிலையை கவனித்து தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்