Actor Aruldoss: நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.. போலி அறிவாளி.. மிஷ்கினை வெளுத்து வாங்கிய அருள்தாஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Aruldoss: நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.. போலி அறிவாளி.. மிஷ்கினை வெளுத்து வாங்கிய அருள்தாஸ்

Actor Aruldoss: நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.. போலி அறிவாளி.. மிஷ்கினை வெளுத்து வாங்கிய அருள்தாஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 22, 2025 08:59 PM IST

Actor Aruldoss Slams Director Mysskin: தமிழ் சினிமாவில் நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா. உன்னை ஒரு போலி அறிவாளி என்றுதான் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கினை கடுமையாக விமர்சித்துள்ளார் ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ்.

நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.. போலி அறிவாளி.. மிஷ்கினை வெளுத்து வாங்கிய அருள்தாஸ்
நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.. போலி அறிவாளி.. மிஷ்கினை வெளுத்து வாங்கிய அருள்தாஸ்

இதையடுத்து மிஷ்கினின் பேச்சுக்கு பிரபல ஒளிப்பதிவாளரும், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வருபவருமான அருள்தாஸ் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து 2கே லவ்ஸ்டோர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் அருள்தாஸ் கூறியதாவது. "இந்த மேடை ரொம்ப அமைதியா, எல்லாரும் பாசிடிவ் ஆக, அன்பா பேசுறாங்க. சமீபத்தில ஒரு மேடைல படத்துல இயக்குநர் மிஷ்கின் பேசுனது ரொம்ப அநியாயமா இருந்தது. அவ்வளவு வல்கரா பேசணும்னு அவசியம் கிடையாது. இயக்குநர்னா என்ன வேணாலும் பேசலாமா?

பெண் பத்திரிகையாளர் முன்னிலையில் அநாகரிக பேச்சு

அந்த விடியோ பார்த்தேன். தலைகுணிவா இருந்துச்சு. தமிழ் சினிமா, தமிழ் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்திய அளவில் மிதக்ககூடியவர்களாக இருக்கிறார்கள். அதே மாதிரி பிரசாத் லேப் மேடை பல ஜாம்பவான்களை பார்த்தது. இங்கு எவ்வளவு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த மேடையில் பத்திரிகையாளர்கள், அதுவும் பெண் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மேடை நாகரிகம் இல்லாமல் பேசியுள்ளார். மேடை நாகரிகம் என்று ஒரு விஷயம் இருக்கிறது.

எத வேணாலும் பேசிட முடியாது. உலக சினிமாக்கள், புத்தகங்கள் படித்திருக்கிறதாக சொல்கிறீர்கள். அப்படி இருக்கையில் என்ன அறிவு இருக்கிறது. உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கிறது. எனக்கு இருக்கிறது. எனவே மேடை நாகரிகம் என்பது மிக முக்கியம் .

சகட்டு மேனிக்கு வாடா போட என்கிறார்

தம்பி என்று கூப்பிடுவது பெரிய விஷயமல்லை. கூப்பிடுபவர்கள் நம்மை அண்ணனாக நினைக்க வேண்டும். அப்படியாரு உங்களை அண்ணனாக நினைத்தார்கள் என தெரியவில்லை. எல்லாரையும் சகட்டு மேனிக்கு வாடா, போடா என சொல்கிறார்.

தொடர்ந்து பல மேடைகளில் இப்படி தான் பேசுகிறார். சமீபத்தில் பாலாவின் 25ஆம் ஆண்டு கொண்டாட்டம் நடந்தது. பாலா குடிகாரன் என சொல்வதும், இளையராஜாவை அவன்தான் என கூறுவது. தமிழ் சினிமாவில் நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா. ஒரு போலி அறிவாளி என்றுதான் சொல்ல வேண்டும்.

போலி அறிவாளி

அன்னைக்கு மேடையில் உட்கார்ந்து இருந்த அனைவரும் மிக திறமையான அற்புதமான நம் மண் சார்ந்த படங்களை இயக்கிய அமீர், வெற்றிமாறன், பா. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் தான். பணங்கிழக்கு வியாபாரி அருகில் பர்கர் வியாபாரியை அமர வைத்தது போல், உலக சினிமாவை காப்பி அடித்து ஜெயிச்ச போலி அறிவாளி தான் மிஷ்கின்.

அநாகரிகமாக ஒரு மேடையில், ஆணவத்துடன் பேசுவது மனது கஷ்டமாக உள்ளது. தமிழ் சினிமா இயக்குநர்கள் பெரிதும் மதிக்ககூடிய கலைஞன் நான். எப்போதும் ஷுட்டிங் ஸ்பாட் சென்றால் களிமண் மாதிரி செல்வேன். இயக்குநர் செல்வதை மட்டும் செய்வேன். அது அனைவருக்கும் தெரியும். புரொடக்சன் விஷயத்தில் எவ்வித டார்ச்சரும் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.

இனி நாகரீகமாக பேசுங்கள்

தமிழ் சினிமாவையும், தமிழ் சினிமாவையும் பெரிதும் மதிக்கூடியவன் நான், ஆனால் மிஷ்கின் பேசிய அந்த மேடை மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்தது. எனவே மிஷ்கின் அவர்களே, நீங்கள் தம்பியாகவோ அல்லது அண்ணனாகவோ இருக்கலாம். நீங்கள் ட்ரெண்ட் செட்டிங் படம் இயக்கி ஜெயித்தவர் இல்லை.

சாதாரண படங்கள் எடுத்து தான் ஜெயித்துள்ளீர்கள். சுசீந்திரன் மாதிரி வெண்ணிலா கபடி குழு, அமீர் மாதிரி பருத்திவீரன் போன்ற மண் சார்ந்த படங்களை எடுத்து ஜெயித்தவர் இல்லை. வெளி நாட்டு படங்களில் மோகத்தில் ஜெயித்தவர் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.

இனியும் பல மேடைகளில் நீங்கள் பேசலாம். உங்களுடன் பெரும் கலைஞர்கள் உட்கார்ந்து இருப்பார்கள். எனவே நாகரிகமாக பேசுங்கள். வெற்றிமாறன், ரஞ்சித், அமீரை குடிகாரர்கள் என்று பேசியுள்ளார். இவருக்கு தெரியுமா. எத்தனையோ பேர் குடிக்காமல் உள்ளார்கள். ஏற்கனவே சினிமா காரன் என்றாலே பார்க்கும் பார்வையை வேறு மாதிரி உள்ளது. எனவே நம்மளை நாமே தாழ்த்தி அசிங்கபடுத்த வேண்டாம்" என்று கூறினார்.

மிஷ்கினின் பேச்சு

"அமீரையும், வெற்றிமாறனையும் தவிர இங்கிருக்கும் அனைவருமே குடிகாரர்கள். தமிழ் சினிமாவில் அதிகமாக குடித்தவனும் குடித்துக்கொண்டிருப்பவனும், குடித்துக் கொண்டிருக்கப்போபவனும் நானே. தமிழ்நாட்டில் ஆதியில் இருந்து குடியானது இருக்கிறது. எனக்கு அதைப் பற்றிய முழு விவரமும் நன்றாகவே தெரியும்.

சாராயமே காய்ச்சும் அளவுக்கு எனக்கு டெக்னாலஜி தெரியும். இந்த சமூகம் காரி துப்பிய எச்சிலை போலத்தான் அந்த குடியை பார்க்கிறது. கிட்டத்தட்ட நம்மிடம் ஆறு வகையான பழங்குடிகள் இருக்கிறார்கள்; அவர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில், மதுவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அந்த மதுவை அவர்கள் அவர்களின் கடவுள் வழிபாட்டின் போது குடிப்பார்கள்.

நாளும் மதுவை விரும்பி நேசித்து குடிப்பவன்தான். ஆனால், ஒரு நாள் கூட அந்த மது என்னை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது கிடையாது. நான் துணை இயக்குனராக இருக்கும் பொழுது, குடிக்க செல்வோம்; அப்பொழுது ஒரு குவாட்டர் வாங்கதான் காசு இருக்கும்

குடிக்கு அடிமையானவர்கள் பெரும்பான்மையானோர் மிகவும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். இன்று எது தான் நம்மை அடிமையாக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் என் மகள் போல இருக்கும் பெண்கள், அநாகரிகமான பாடலுக்கு, உதட்டை கடித்து நடனமாடுகிறார்கள். இதைவிட ஒரு அடிமைத்தனம் இருக்க முடியுமா என்ன? இன்னும் கொஞ்ச நாட்களில் ஐபிஎல் வந்துவிடும்; நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அதை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருப்போம்" என்று பேசினார்

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.