Bigg Boss 8: ‘செல்லம்மா’ சீரியல் முடிஞ்சு போச்சுன்னு.. பிக்பாஸ் சீசன் 8 -ல் நானா? - சீரியல் நடிகர் அர்ணவ் விளக்கம்!
Bigg Boss 8: “எல்லோருமே இதைப்பற்றி கேட்டு விட்டார்கள் நீங்கள் தான் கேட்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.” - நடிகர் அர்ணவ் விளக்கம்!
Bigg Boss 8: மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி, களேபரம் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் செல்லும் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அடுத்த மாதம் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் 8 வது சீசனின் போட்டியாளர்கள் யார் என்ற மக்கள் மத்தியில் வலுக்க தொடங்கியுள்ள நிலையில் 8 ஆவது சீசனின் போட்டியாளர்களாக ரவீந்தர் சந்திரசேகர், மன்சூர் அலிகான், பூனம் பஜ்வா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ரஞ்சித், சஞ்சனா, நகைச்சுவை நடிகர் செந்தில், பப்லு பிரிதிவிராஜ், பாடகி ஸ்வேதா மேனன், பாடகி கல்பனா, சோனியா அகர்வால் கிரண், வினோத் பாபு, பவித்ரா ஜனனி போன்றவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, பல சர்ச்சைகளில் சிக்கி, ஜெயில் வரை சென்று வந்த சீரியல் நடிகர் அர்ணவிற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலுக்கு அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் நானா
இது குறித்து அவர் பேசும் போது, “ எல்லோருமே இதைப்பற்றி கேட்டு விட்டார்கள் நீங்கள் தான் கேட்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். செல்லம்மா சீரியல் முடிவுக்கு வந்ததால், நான் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கிறார்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது வெறும் வதந்தி தான்.” என்று பேசினார்.
முன்னதாக, கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல் ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்து இருந்தது. யாரும் எதிர்பார்க்காத விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு எனக் கூறி வில்லத்தனமாக சிரிக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதனால், இவர் நிகழ்ச்சியை எப்படி கையாளப் போகிறார் என்பதைக் காண மக்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
அதுமட்டுமின்றி, குரூப்பிசம், டாமினேட் செய்பவர்களை ஓட விட வேண்டும். காய்கறிகளில் நல்லது எது கெட்டது எது என பார்த்தாலே தெரிந்துவிடும். ஆனால் மனிதர்களை பார்த்தவுடன் தெரிந்துகொள்ள முடியாது. கேமை தவறாக விளையாடினால் அவர்களுக்கு எந்த கார்டு கொடுக்க வேண்டும் என தெரிய வேண்டும். வார நாட்களில் சண்டையிடுபவர்கள், வார இறுதி நாட்களில் நல்லவர்கள் போல் தங்களை காட்டிக் கொள்வார்கள் என அட்வைஸ்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது
கமல் ஹாசன் விலகல்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை நடிகர் கமல் ஹாசன் அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், சினிமாவில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்