'என்னையும் அறியாமல் டைரக்டரால் பைத்தியமானேன்.. நேஷனல் அவார்டு டைரக்டருக்கு வந்த பாராட்டு'
நான் ஹீரோக்களின் செய்களுக்கு உடன்படவில்லை என்றாலும் அந்தக் காட்சிகள் சித்தரிக்கும் விதத்திற்கு ரசிகனாகிவிட்டேன் என நடிகர் அர்ஜூன் கபூர் இயக்குநர் சந்தீப் ரெட்டியை பாராட்டியுள்ளார்.

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனித்துவமான இயக்க பாணியால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களையும் மயக்குகிறார் . அர்ஜுன் ரெட்டியிலிருந்து அனிமல் வரை, இந்த இயக்குனரின் படைப்புகள் குறித்த வைரல் கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகர் அர்ஜுன் கபூரும் சந்தீப் ரெட்டி வங்கா குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்தைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
எந்த சிந்தனையும் இல்லை
சல்சித்ரா டாக்ஸ் பாட்காஸ்டில், பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜூன் கபூர், தான் எப்படி இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் ரசிகரானேன் என்பதை எசதிர்பாராத தருணத்தில் விளக்கியுள்ளார். பெரும்பாலான இந்திய படங்களில் காட்சி மொழிக்குப் பின்னால் எந்த சிந்தனையும் இல்லை என்று பாட்காஸ்ட் தொகுப்பாளர் கூறியபோது இவர் இதனை விளக்கியுள்ளார்.
செயல்களுக்கு உடன்படவில்லை.. ஆனால்..
அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் ஹீரோக்களின் செயல்களுடன் தான் உடன்படவில்லை என்று அர்ஜுன் கபூர் கூறியுள்ளார். இருந்தாலும், அந்த கதாபாத்திரங்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை சந்தீப் எவ்வளவு நன்றாக விளக்கியுள்ளார் என்பதை தான் ரசித்ததாக அவர் கூறியுள்ளார். அந்த இயக்குனரின் காட்சி அமைப்புக்கு தான் ரசிகன் என்று அர்ஜுன் கூறியுள்ளார்.
எல்லாம் அற்புதம்
எடிட்டிங், காட்சி அமைப்பு, காட்சி, ஆடியோ பாணி ஆகியவற்றில் சந்தீப் ரெட்டி தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ளார் என்று அர்ஜுன் கூறியுள்ளார். குறிப்பாக அனிமல் படத்தின் இடைவேளை காட்சி அற்புதமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
எல்லாம் ஹைப்
அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் கதாபாத்திரத்தில் அவரது, கும்பல்களை எதிர்கொள்ளும் காட்சி திரையரங்குகளில் விசில்களைப் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். “ஓல்ட் பாய்ஸ் (காரிடார்) காட்சி எனக்கு நினைவிருக்கிறது. அப்போது சந்தீப் என்ன செய்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.
கும்பல்களுக்கு முகமூடிகளை அணிவித்த சந்தீப், அவற்றை வெறும் கேலிச்சித்திரமாக அல்லாமல், தீமையின் முகமாகக் காட்ட விரும்பினார். பாபி தியோலின் அறிமுகம், ரன்பீர் ஸ்ப்ளிட் ஸ்கிரீனைப் பயன்படுத்திய விதம் சாதாரணமானதல்ல. அந்த பின்னணி ஒலி அந்த காட்சியை மேலும் உயர்த்தியது” என்று அர்ஜுன் கூறியுள்ளார்.
பைத்தியமானேன்
அனிமல் படத்தில் ரன்பீர் துப்பாக்கியுடன் பள்ளிக்குச் செல்வதைப் பலர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அர்ஜுன் கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடன் சந்தீப் இயக்கிய முதல் படம் அர்ஜுன் ரெட்டி பற்றி அர்ஜுன் பேசுகையில், “அர்ஜுன் ரெட்டி மிகவும் அற்புதமாக உருவான படம். அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். தனியாகப் பார்த்தேன். நான் இருக்கையில் இருந்து எழுந்து கைதட்ட ஆரம்பித்தேன். இந்த மனிதனின் மூளை எப்படி வேலை செய்கிறது, இந்த எழுத்து என்ன என்பதை யோசித்து நான் அவருக்கு பைத்தியமாகவே ஆனேன்” என்று அர்ஜுன் கூறியுள்ளார்.
சமீபத்திய படங்கள்
அர்ஜுன் கடைசியாக 2024 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் அகெய்ன் படத்தில் வில்லனாகவும், 2025 இல் ரொமாண்டிக் காமெடி படமான மெரே ஹஸ்பண்ட் கி பீவி படத்திலும் நடித்தார். சந்தீப்பின் கடைசி படம் 'அனிமல்' 2023 இல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தற்போது பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தின் படப்பிடிப்பில் அவர் ஈடுபட்டுள்ளார்.

டாபிக்ஸ்