Actor Arav: அஜித் சாருக்கும் விஜய் சாருக்கும் இடையில் நல்ல பாண்ட் இருக்குது.. நடிகர் ஆரவ் மனம் திறந்த பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Arav: அஜித் சாருக்கும் விஜய் சாருக்கும் இடையில் நல்ல பாண்ட் இருக்குது.. நடிகர் ஆரவ் மனம் திறந்த பேச்சு

Actor Arav: அஜித் சாருக்கும் விஜய் சாருக்கும் இடையில் நல்ல பாண்ட் இருக்குது.. நடிகர் ஆரவ் மனம் திறந்த பேச்சு

Marimuthu M HT Tamil Published Feb 07, 2025 06:18 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 07, 2025 06:18 AM IST

Actor Arav: நடிகர் ஆரவ் விடாமுயற்சி சூட்டிங்கின்போது அஜித் சாருடன் நட்பு பாராட்டியது குறித்தும், விடாமுயற்சி பட அனுபவங்கள் குறித்தும், விஜய் அஜித்துக்கு இடையில் இருக்கும் பந்தம் குறித்தும் பேசிய பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

Actor Arav: அஜித் சாருக்கும் விஜய் சாருக்கும் இடையில் நல்ல பாண்ட் இருக்குது.. மனம் திறந்த நடிகர் ஆரவ்
Actor Arav: அஜித் சாருக்கும் விஜய் சாருக்கும் இடையில் நல்ல பாண்ட் இருக்குது.. மனம் திறந்த நடிகர் ஆரவ்

நடிகர் அஜித் குமாருடன் பழகிய தருணங்களை, விடாமுயற்சி படத்தில் நடித்த அனுபவங்களை நடிகர் ஆரவ் கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி யூட்யூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் ஆரவ் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம். அதில்,

‘’அஜித் சாருடன் சேர்ந்து நடித்தது எப்படி இருந்தது?

ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இதற்காகப் பல ஆண்டுகள் காத்திருந்து இருக்கிறேன். முன்பே நான் அஜித் சார் கூட நடிக்கவேண்டியது. மிஸ் ஆகிடுச்சு. விடாமுயற்சி படத்தில் நான் இருக்கிறேன் என்று உறுதியானதும் ரொம்ப ஹேப்பியாக இருந்துச்சு.

நான் என்ன கவனித்தேன் என்றால், அவருடன் பணியாற்றிய பின், நடிகர் அஜித் சாரிடம் பேசியிருப்பீங்க. இருந்தாலும் அவர் பற்றி நீங்கள் பிரமிப்புடன் இருக்கீங்கன்னு புரியுது?

அஜித் சார் ரொம்ப ஸ்பெஷல். என்னுடைய மனைவிக்கும் சரி, என்னுடைய குடும்பத்துக்கும் சரி அவர் ரொம்பவே ஸ்பெஷல் தான். சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் கிடையாது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்கள் ரொம்ப ரொம்பக் குறைவு தான். அஜித் சாருக்கு ரொம்ப கிளோஸ் ஆக இருக்கிறேன். அதுதான். எனக்கு சார்கிட்ட பேசும்போது ஒவ்வொரு முறையும் ரொம்ப க்ளோஸ் ஆக உணர்கிறேன்.

அஜித் சார்கிட்ட பேசுற ஒவ்வொரு முறையும் புதுசாக பேசுறமாதிரி தான் இருக்கேன். அஜித் சார்கூட பேசும்போது என் குடும்பத்தைப் பற்றிப் பேசுவாங்க. அஜித் சாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட பின், அவரை நேரில் போய் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

அஜித் சாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதும் எப்படி இருந்தது?

நாம் ஜெயித்த ஒரு ஃபீல் இருந்தது. எனக்குத் தெரியும் ஒரு சினிமா பின்புலம் இல்லாதவர் எப்படி சினிமாவில் இருக்க முடியும் என்று. அவருடைய பயணம் எனக்குத் தெரியும்.

விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து குறித்து என்ன நினைச்சீங்க?

ஒரு இடத்தில் கார் பட்டு குதிச்சுப்போய் தரையிறங்குச்சு. அவர் கூட நடிக்கும்போது, எஞ்சாய் செய்துட்டு தான் இருந்தேன். என்னிக்குமே நானும் டென்ஷனாக நினைச்சது இல்ல. கார் இப்படி கவிழ்ந்து விழுமா அப்படின்னு சார்கிட்ட பேசி சிரிச்சிட்டு இருந்தோம். அடுத்த ஷாட்டில் தான் அந்த விபத்து நடந்தது. கார் வந்து அவுட் ஆஃப் கண்ட்ரோல் போனது. அது ஒரு உண்மையான விபத்து. நாங்க வந்த ஸ்பீடுக்கு, கார் ரோட்டின் பக்கத்தில் இருந்த ஜல்லியில் பட்டதும், அவுட் ஆஃப் தி கண்ட்ரோல் கார் போயிடுச்சு. பாலைவனம் என்பதால் அப்படியே ரோல் ஆகி கீழப்போனதுதான்.

அஜித் சார் விபத்து பற்றி என்ன சொன்னாங்க?

அந்த விபத்துக்கு முன்பு அஜித் சார் விபத்தில் சிக்கியபோது எல்லாம் தனியாக இருந்திருக்கிறார். இதுமுதல் முறை. ஒரு நடிகரை வைச்சுக்கிட்டு இப்படி விபத்து நடந்ததால், ரொம்ப மோசமாக ஃபீல் பண்ணுனார். விபத்து நடந்ததுக்குப் பின் கண்ணாடியை உடைச்சிட்டு வெளிய வந்ததும், ஆரவ்க்கு என்ன ஆச்சுன்னு கேட்கிறார். அடுத்து ஆரவைப் பாருங்க எனச் சொன்னார். இந்த காலகட்டத்தில் பொதுவாக எரிபொருள் லீக் ஆகும். தீ பிடிக்கும். எனக்கும் உள்ளே இந்த ஃபீல் ஆகுது. விபத்து நடந்ததும் என்னை எடுக்கவுமே, 5 நிமிஷம் ஆச்சு. சார் உடைய வயதில் இமேஜில் இருக்கும் நபர், குதி என்றால் உடனே குதிக்க மாட்டாங்க. அஜித் சார் ரிஸ்க் எடுத்து குதிப்பார். பயமே இல்லாமல் ஒருத்தரை நான் பார்த்திருக்கிறேன் என்றால், அது அஜித் சார் தான்.

அஜித் சாரிடம் விஜய் சார் பத்தி கேட்டிருக்கீங்களா?

விஜய் சாருடன் இருக்கும் பெஸ்ட் மொமன்ட்ஸை ஷேர் செய்திருக்கார், அஜித் சார். விஜய் சாருக்கு நிறைய கிரெடிட்ஸ் கொடுக்கிறாங்க. எல்லா இடத்திலும் விஜய் சாருக்கு மரியாதை கொடுப்பாங்க. அவங்க இரண்டு பேருக்கும் நல்ல ஒரு ஃபாண்ட் இருக்குது'' என்று தெரிவித்தார், நடிகர் ஆரவ்.

நன்றி: கலாட்டா தமிழ் யூட்யூப் சேனல்

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.