Antony: சோசியல் மீடியாவில் இருக்கிறது பெரிய அடிக்சன்.. நடிகர் ஆனால் அவ்வளவு போராட்டம் இருக்கும்: நடிகர் ஆண்டனி
Antony: சோசியல் மீடியாவில் இருக்கிறது பெரிய அடிக்சன்.. நடிகர் ஆனால் அவ்வளவு போராட்டம் இருக்கும் என நடிகர் ஆண்டனி பேட்டியளித்துள்ளார்.

Antony: சோசியல் மீடியாவில் இருக்கிறது பெரிய அடிக்சன்.. நடிகர் ஆனால் அவ்வளவு போராட்டம் இருக்கும் என மேற்குத்தொடர்ச்சி மலை, ரைட்டர், மெய்யழகன், பாட்டில் ராதா படத்தில் நடிகர் நடிகர் ஆண்டனி கூறியிருக்கிறார்.
பாட்டில் ராதா படத்தில் நடித்த மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படப் புகழ், நடிகர் ஆண்டனி விசில் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியவதாவது, ‘’ பாட்டில் ராதா படத்தில் நான் நடித்ததைக் கூப்பிட்டு வாழ்த்துறது மகிழ்ச்சியாக இருக்கு. முன்பே நீலம் புரொடக்ஷனில் நான் ரைட்டர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருந்தேன்.
அடுத்து மீண்டும், பாட்டில் ராதா படத்துக்கு நடிக்க கூப்பிட்டபோது, குடிக்கும் நபரின் தம்பியாக நடித்தேன். நாம் நிறைய ரோட்டில் போகும்போது, நான் நடிச்ச கேரக்டர் மாதிரி ஒரு கேரக்டரைப் பார்த்திருக்கேன். அது அணுகுமுறையாகவும், நடிக்கிறதுக்கும் நல்ல கேரக்டராக இருந்ததால், பாட்டில் ராதா படத்தில் அப்படி நடிச்சேன்.
என்ன தான் எமோஷனலாக பண்ணுனாலும், ஹீமர் ரோல் செய்யும்போது சீக்கிரமாக ரீச் ஆகலாம். மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் பெரிய வெற்றி. அந்தப்போட்டியில் பாட்டில் ராதாவும் போய்க்கிட்டு இருக்கு.
பாட்டில் ராதா படத்தில் குடி வந்ததுக்குப் பின் என்ன மாதிரி பாதிப்பு வரும்னு சொல்லியிருக்காங்க. நீங்கள் குடிகாரன் ஆக ஆகிவிட்டால், உடல்நலமாக நிறைய பாதிப்புகள் வருது.
மொபைல் அடிக்சனும் ஒரு வகை அடிக்சன் ஆக மாறிடுச்சு: ஆண்டனி!
அதேமாதிரி மொபைல் அடிக்சனும் ஒரு வகை அடிக்சனாக மாறிடுச்சு. நானும் அதில் இருந்து வெளியில் வரமுடியல. முன்பு செயின் ஸ்மோக்கர் ஆக இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் தான் விட்டேன். அதில் இருந்து வெளியே வருவது மிகப்பெரிய கஷ்டம். அரை மணி நேரத்துக்கு மேல் மொபைல் பயன்படுத்தக்கூடாது.
முதல் முதலாக ஒரு பெண் வந்து ரீல்ஸ் வந்து எடுத்து, சோசியல் மீடியாவில் போடும்போது, கமெண்ட் எதுவும் வரவில்லை. அடுத்து ஆடைக்குறைப்பு செய்யும்போது, அந்தப்பெண்ணுக்கு லைக் வருது.
சோசியல் மீடியாவில் இருக்கிறது சில நாட்கள் எனக்கு இரண்டு, மூன்று நாட்கள் தூக்கத்தைப் பறிச்சிடுச்சி: ஆண்டனி
என்னைக் கேட்பாங்க. என்ன இன்ஸ்டாவில் இருக்கீங்களான்னு கேட்பாங்க. அதில் எனக்கு ஃபாலோவர்ஸ் குறைவாக இருக்கிறதைப் பார்த்திட்டு, ஏன் நடிகருக்கே குறைவாக இருக்குன்னு கேட்பாங்க. காலையில் எழுந்ததில் இருந்து தூங்கப்போவது வரை, நாம் அதிகமாக பயன்படுத்துவது மொபைலை தான். இனிவரும் பெண்களின் பாதுகாப்பு தான் கேள்விக்குறியாக இருக்கு. அதனால், இந்த சோசியல் மீடியாவில் இருக்கிறது பெரிய அடிக்சன் ஆகிடுச்சு. சில நாட்கள் எனக்கு இரண்டு, மூன்று நாட்கள் தூக்கத்தைப் பறிச்சிடுச்சி. அதனால், பேஸிக் போனுக்கே போயிடலாமான்னு எல்லாம் தோணுது. என் போனில், 25ஆயிரம் குரூப் இருக்கு.
எல்லா வாட்ஸ்அப் குழுவிலும் என்னை சேர்த்துவிட்டுடுறாங்க. ஒரு நாளைக்கு ஆயிரம் மெசேஜ் வருது. இதுவே, நமக்கு மனரீதியாக டிப்ரசனைக் கொடுத்திடுது.
அடுத்து பேடிஎம்ன்னு ஒன்று இருக்கு. நமக்கு மேனேஜர்கிட்ட சம்பளம் வாங்குவதே பெரும்பாடாக இருக்கு. அதை வைச்சிக்கிட்டு, ஒரு 30 ரூபாய் போட்டுவிடுங்க, பெட்ரோல் தீர்ந்துடிச்சின்னு சொல்வாங்க. நாம் ஒரு சூழலில் அப்படி இருந்தது, நாம் சினிமாவில் வளரும்போது திரும்பிச்செய்யணும்கிறதைச் சொல்லுது.
நடிகர் ஆனால் அவ்வளவு போராட்டம் இருக்கும்: ஆண்டனி
ஒன்று ஜெயித்தால் பீக்கில் போயிடணும். மணிகண்டன் மாதிரி. ஏனென்றால், வெளியே போயிட்டீங்க என்றால், நீங்க ஹீரோ தான். ஆனால், நடிகராக ஆனீங்க என்றால், நாம் பலருக்கு உதவி பண்ணமுடியாது. அவ்வளவு போராட்டம் இருக்கும். ஏனென்றால், ஒரு குடும்பஸ்தனுக்கு அவ்வளவு செலவுகள் இருக்கு.
படம் ஹிட் ஆகிடுச்சு என்றால், பத்து படம் வரும். இல்லையென்றால், இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலை நடிச்சு முடித்தபிறகு, நல்ல டீமாக இருந்தால் எந்த கேரக்டர் ரோல் செய்தாலும் சந்தோஷம் என இருந்தேன்.
நமக்கு மனசுக்குப் பிடித்து செய்றது சில படங்கள் வொர்க் அவுட் ஆகுது. சில படங்கள் வொர்க் அவுட் ஆகுறது இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலைக்குப் பின், ஒருவாரத்தில் நிறைய வாய்ப்புகள் வந்தன. அப்படி சம்பாதித்து இருந்தால் ரூ.30 லட்சம் வரை சம்பாதித்து இருப்பேன். இருந்தாலும் மேற்குத்தொடர்ச்சி மலை படத்தில் நடித்தபிறகு, முக்கியமான படங்கள் மட்டும் தான் பண்ணுகிறேன்'' என்றார், நடிகர் ஆண்டனி.
நன்றி: மேற்குத்தொடர்ச்சி மலை படப்புகழ் ஆண்டனி மற்றும் விசில் யூட்யூப் சேனல்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்