காந்தாரா அத்யாயம் 1 படப்பிடிப்பில் நிகழ்ந்த அடுத்த மரணம்.. ஒரு மாதத்திற்குள்ளாக 3 தொடர் மரணங்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காந்தாரா அத்யாயம் 1 படப்பிடிப்பில் நிகழ்ந்த அடுத்த மரணம்.. ஒரு மாதத்திற்குள்ளாக 3 தொடர் மரணங்கள்..

காந்தாரா அத்யாயம் 1 படப்பிடிப்பில் நிகழ்ந்த அடுத்த மரணம்.. ஒரு மாதத்திற்குள்ளாக 3 தொடர் மரணங்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Jun 14, 2025 04:08 PM IST

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: அத்தியாயம் 1 படக்குழுவில் நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நிஜுவின் மரணம் மேலும் ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தாரா அத்யாயம் 1 படப்பிடிப்பில் நிகழ்ந்த அடுத்த மரணம்.. ஒரு மாதத்திற்குள்ளாக 3 தொடர் மரணங்கள்..
காந்தாரா அத்யாயம் 1 படப்பிடிப்பில் நிகழ்ந்த அடுத்த மரணம்.. ஒரு மாதத்திற்குள்ளாக 3 தொடர் மரணங்கள்..

காந்தாரா படப்பிடிப்பில் மேலும் ஒரு மரணம்

நிஜு வியாழக்கிழமை இரவு பெங்களூரில் காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பில் இருந்தபோது இறந்தார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. 43 வயதான அவர், படத்தின் கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோம்ஸ்டேயில் நெஞ்சு வலி இருப்பதாகக் கூறினார், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் அவர் துரதிர்ஷ்டவசமாக பிழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கேரள நடிகர்

நிஜு சமீபத்தில் மலையாளத்தில் ஹிட் அடித்த மார்க்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், ரிஷப் ஷெட்டியின் படத்தில் வாய்ப்பு பெற ஆடிஷன் செய்தார். இவர் படப்பிடிப்பு சமயத்தில் உயிரிழந்தார் என்பதை மிமிக்ரி கலைஞர் கண்ணன் சாகர் உறுதிப்படுத்தினார், மேலும் வியாழக்கிழமை இரவு 10:30 மணிக்கு பகிரப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் இது குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக கூறினார்.

காந்தாரா படப்பிடிப்பில் அடுத்தடுத்த மரணம்

காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பில் நடந்த முதல் மரணம் அல்ல இது. இந்த ஆண்டு மே மாதம், கன்னட நடிகர்-நகைச்சுவை நடிகர் ராகேஷ் பூஜாரி காந்தாரா படப்பிடிப்பிற்கு நடுவே தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்க சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் தன் 33 வயதில் மரணத்தை தழுவினார். அதற்கு முன், அதே மாதத்தில், கேரளாவைச் சேர்ந்த எம்.எஃப். கபில் என்ற 32 வயது ஜூனியர் கலைஞர் சௌபர்ணிகா ஆற்றில் குறுக்குச் சுழலில் சிக்கி இறந்தார்.

ஷீட்டிங் சமய விபத்து

கடந்த ஆண்டு நவம்பரில், 20 ஜூனியர் கலைஞர்களை ஏற்றிச் சென்ற மினிபஸ் மூடூரில் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் அவர்கள் காயமின்றி தப்பினர். அதற்கு முன், காந்தாரா: அத்தியாயம் 1 க்காக வடிவமைக்கப்பட்ட விலையுயர்ந்த செட் பலத்த மழையால் அழிக்கப்பட்டது.

காந்தாரா: அத்தியாயம் 1 பற்றி

காந்தாரா: அத்தியாயம் 1 என்பது ரிஷப் ஷெட்டியின் 2022 சூப்பர் ஹிட் காந்தாராவின் முன்கதை. இந்த படத்தை சமீபத்தில் கேஜிஎஃப் மற்றும் சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தில் ரிஷப் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.