Shihan Hussaini: இறுதிவரை போராடி உயிரிழந்த ஹூசைனி.. பன்முகக் கலைஞனை பறித்துச் சென்ற புற்றுநோய்..
Shihan Hussaini: நடிகரும் கராத்தே, வில்வித்தை பயிற்சியாளருமான ஹூசைனி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

Shihan Hussaini: இறுதிவரை போராடி உயிரிழந்த ஹூசைனி.. பன்முகக் கலைஞனை பறித்துச் சென்ற புற்றுநோய்..
Shihan Hussaini: கராத்தே, வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி தான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும் கூறி வந்த நிலையில், அவர் இன்று (மார்ச் 25) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹூசைனி, இன்று அதிகாலை 1.45 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கராத்தே, வில்வித்தை வீரர்களிடம் மட்டுமின்றி, திரையுலக ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.