Santhana Bharathi: 'இந்தப் படத்த பாத்து தான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன்.. கண்ணதாசனால கிடைத்த வாய்ப்பு '- சந்தான பாரதி
Santhana Bharathi: நான் பாலச்சந்தர் படம் பார்த்து தான் சினிமாவுக்கு வரணும்ன்னு ஆசைப்பேட்டேன் என நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Santhana Bharathi: தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர் மற்றும் இயக்குநர்களில் ஒருவர் சந்தான பாரதி. இவர் காமெடி கதாப்பாத்திரமானாலும், குணச்சித்திர வேடமானாலும் அதனை அவருக்கே உரித்தான முறையில் நடித்து காட்டுவார். அப்படி இருப்பவர் சில மாதங்களுக்கு முன் வசந்த் டீவியின் காட் பாதர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, தான் சினிமாவிற்கு வந்த கதை, நண்பர்கள் குறித்து பேசியிருக்கிறார்.
நான் சினிமாவுக்கு வர காரணமான படம்
அந்தப் பேட்டியில், " நான் டிகிரி முடிச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம சுத்திட்டு இருந்தேன். என்னோட கேங்ல இருக்க எல்லாரும் சினிமா சம்பந்தபட்டவங்க. ஆனாலும் எனக்கு சினிமா துறைக்குள்ள வரணும்ன்னு ஆசையில்ல. அண்ணாதுரை அசிஸ்டன்ட் டைரக்டரான ஆனதுக்கு அப்புறம், அன்பில் பொய்யாமொழி என்னோட கிளாஸ்மேட். அவரோட கல்யாணத்துக்கு நாங்க எல்லாம் திருச்சி போறோம். அப்போ தான் அபூர்வ ராகங்கள் படம் ரிலீஸ். நான் காலேஜ் படிக்கும் போது பாலச்சந்தர் படம் நிறைய பாப்பேன். அதெல்லாம் ரொம்ப வித்யாசமான படமா இருக்கும். அப்போ நான் அபூர்வ ராகங்கள் படம் பார்க்கும் போது தான் நாம ஏன் சினிமாவுக்கு வரக்கூடாதுன்னு எனக்கு தோணுச்சு.
