Pradeep Ranganathan: படத்த பார்த்து தேம்பி தேம்பி அழுதேன்.. பிரதீப் ரங்கநாதன் சொல்லும் படம் எது?
Pradeep Ranganathan: நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் படம் ஒன்றை பார்த்து தேம்பி தேம்பி அழுததாக டிராகன் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

Pradeep Ranganathan: கோமளி படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்து மேலும் பிரபலமானார். இப்போது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக டிராகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படம் தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ரிட்டன் ஆஃப் தி டிராகன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்று கயாடு லோஹர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் புரொமோஷன்
படம் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தச் சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) ட்ராகன் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பிரதீப் ரங்கநாதன் தெலுங்கில் பேசியதுடன், சில சுவாரஸ்யமான கருத்துகளையும் தெரிவித்தார்.
முயற்சி பண்ணினோமா இல்லையா?
பிரதீப்பின் லவ் டுடே படமும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படம் தெலுங்கில் ரிலீஸான சமயத்தில் பிரதீப் மீண்டும் இங்கு வரும் போது தெலுங்கில் பேசுவேன் என வாக்கு கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது டிராகன் பட நிகழ்ச்சியில் பேசிய பிரதீப், "லவ் டுடே படத்தின் போது இங்கு வந்த சமயத்தில் அனைவருக்கும் ஒரு வாக்குறுதி கொடுத்தேன். அடுத்த முறை இங்கு வரும்போது தெலுங்கில் பேசுவேன் என்று சொன்னேன். அதனால்தான் இப்போது தெலுங்கில் பேச முயற்சிக்கிறேன். வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்றுவோமா இல்லையா என்பதை விட, அதை முயற்சி பண்ணினோமா இல்லையா என்பதுதான் முக்கியம். அதுதான் எங்கள் டிராகன் படம்" என்று பிரதீப் ரங்கநாதன் கூறினார்.
ஒரு நாள் சாதிப்போம்
"ஒரு சாதாரண பையன், வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்வதுதான் எங்கள் டிராகன். ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை சாதிக்க முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அப்படி முயற்சி செய்யும் ஒவ்வொருவரின் மனதிலும் எங்கள் டிராகன் நிலைத்து நிற்கும். என்னை ஆதரிக்கும் தெலுங்கு மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் எதை வேண்டுமானாலும் முயற்சி செய்து கொண்டே போனால், ஒரு நாள் நிச்சயம் சாதிப்போம்" என்று ஹீரோ பிரதீப் கூறினார்.
ரொம்ப அழுதேன்
"லவ் டுடே படத்தை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் வரவேற்றனர். பேபி படத்தைப் பார்த்த பிறகு, சாய் ராஜேஷ் அவர்களுடன் நிறைய பேசினேன். நான் அந்தப் படத்தைப் பார்த்து ரொம்ப அழுதேன். படம் பார்த்து என் மனசு ஃப்ரீஸ் ஆயிடுச்சு. எங்களுக்காக வந்த கிஷோர் திருமலை அவர்கள், ஹரீஷ் சங்கர் அவர்கள், எஸ்.கே.என் அவர்களுக்கு நன்றி. எங்கள் படத்தைத் தயாரித்த அர்ச்சனா மேடமிற்கு நன்றி" என்று பிரதீப் ரங்கநாதன் கூறினார்.
அஸ்வத் என்னோட 10 வருஷ ஃப்ரெண்ட்
"அஸ்வத் மாரிமுத்துவும் (இயக்குனர்) நானும் காலேஜில் படிக்கும்போது இருந்தே ஃப்ரெண்ட்ஸ். எங்களுக்கு பத்து வருஷ பழக்கம். அஸ்வத் மாதிரி ஒரு ஃப்ரெண்டுடன் வேலை பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்கள் படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரிக்கு நன்றி. மைத்ரி பேனரில் படம் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மீண்டும் அர்ச்சனா மேடம் எனக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். பிப்ரவரி 21 அன்று எங்கள் படம் வரப்போகுது. எல்லாரும் பாருங்க" என்று பிரதீப் ரங்கநாதன் தனது பேச்சை முடித்தார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்