Actor Parthiban: அஜித்தை கலாய்த்த விஜய் ரசிகர்! நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன்! என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Parthiban: அஜித்தை கலாய்த்த விஜய் ரசிகர்! நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன்! என்ன சொன்னார் தெரியுமா?

Actor Parthiban: அஜித்தை கலாய்த்த விஜய் ரசிகர்! நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன்! என்ன சொன்னார் தெரியுமா?

Suguna Devi P HT Tamil
Jan 17, 2025 09:48 AM IST

Actor Parthiban: அஜித் குமாரை எக்ஸ் தளத்தில் கலாய்த்து பதிவிட்ட விஜய் ரசிகர் ஒருவரை நடிகர் பார்த்திபன் அவரது பாணியில் பதில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Actor Parthiban: அஜித்தை கலாய்த்த விஜய் ரசிகர்! நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன்! என்ன சொன்னார் தெரியுமா?
Actor Parthiban: அஜித்தை கலாய்த்த விஜய் ரசிகர்! நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன்! என்ன சொன்னார் தெரியுமா? (X)

ரசிகர்கள் சண்டை 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் டாப் நடிகர்களின் ரசிகர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது காலங்காலமாக நடந்து வரும் ஒரு விஷயமாகும். அதுவும் சமூக வலைதளங்கள் தோன்றிய பின்னர் இவர்களின் சண்டை வலுப்பெற்றுள்ளது என்றே கூறலாம். அவர்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு எதிராக போட்டியில் இருக்கும் நடிகர்களை திட்டுவதும் வசைச் சொற்களால் பேசுவதும் என மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சண்டைகளாக மாறின. 

இந்த நிலையில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்களின் சண்டையை குறித்து சொல்லவே தேவையில்லை. அவர்களது படம் வெளியாகும் போதும் அஜித் ரசிகர்கள் விஜயை  கலாய்ப்பதும் விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதும் எழுதப்படாத விதியாகிவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி டீசர் குறித்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். 

பார்த்திபனின் கூல் பதில் 

நடிகர் அஜித்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக படங்கள் ஏதும் வெளியாகமல் இருந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். மேலும் நடிகர் விஜய் அவரது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இதன் பின் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். நடிகர் அஜித்தும் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவித்தார். 

இவர்கள் இருவரும் படங்களில் நடிக்க ஆரம்பித்தது ஒரே காலக்கட்டம் தான் என்றாலும் இவர்ககளது படங்களுக்கு நேரடி போட்டி நிலவி வந்தது. இவர்களது ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டாலும் அஜித்தும், விஜயும் சிறந்த நண்பர்கள் ஆவார்கள். மேலும் தற்போது விஜய் ரசிகர் ஒருவர் அஜித்தின விடாமுயற்சி லுக் லியோ படத்தின் விஜய் நடித்த பார்த்திபன் கதாபாத்திரத்தை காப்பியடித்தது போல உள்ளது என்று பதிவிட்ட ஒரு பதிவிற்கு நடிகர் பார்த்திபன் அளித்த பதில் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

அவர் பார்த்திபன் போல அஜித் உள்ளார் எனக் குறிப்பிட்டதை, நடிகர் பார்த்திபன் அஜித் என்னைப் போல் உள்ளார் எனக் கூறியதற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவறது பதிவில் "என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி பரணி.தரணி போற்றும் தனிப்பெரும்

Style-க்குரியவர் AK.incomparable style-க்கு

சொந்தக்காரர்,கார் பைக் போன்றவைகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் கூட,சில இயக்குணர்களுக்கு கிடைப்பதில்லை அவருடன் பயணிக்க என நேற்று மாலை ‘அமர்களம்’சரண் அவர்களிடம் கூறினேன் பெருமையாக!!! எனப் பதிவிட்டுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.