'4 கலர் சட்ட, பாட்டு இருந்தா நான் தான் ஹீரோன்னு சொன்னாங்க' - ஆனந்த ராஜ் ஷேரிங்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  '4 கலர் சட்ட, பாட்டு இருந்தா நான் தான் ஹீரோன்னு சொன்னாங்க' - ஆனந்த ராஜ் ஷேரிங்ஸ்

'4 கலர் சட்ட, பாட்டு இருந்தா நான் தான் ஹீரோன்னு சொன்னாங்க' - ஆனந்த ராஜ் ஷேரிங்ஸ்

Malavica Natarajan HT Tamil
Dec 18, 2024 04:14 PM IST

பிரபல வில்லன் நடிகரான ஆனந்த ராஜ் எப்படி காமெடி நடிகராக மாறினார் என்ற கதையை கூறியுள்ளார்.

'4 கலர் சட்ட, பாட்டு இருந்தா நான் தான் ஹீரோன்னு சொன்னாங்க' - ஆனந்த ராஜ் ஷேரிங்ஸ்
'4 கலர் சட்ட, பாட்டு இருந்தா நான் தான் ஹீரோன்னு சொன்னாங்க' - ஆனந்த ராஜ் ஷேரிங்ஸ்

காமெடியனாக இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் ஒவ்வென்றும் வேறு ரகம். நானும் ரவுடி தான், மரகத நாணயம், ஜாக்பாட், தில்லுக்கு துட்டு போன்ற படங்களில் இவரது நடிப்பு பலராலும் கவரப்பட்டது இந்த நிலையில், இவர் சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இதெல்லாம் ரொம்ப கஷ்டம்

அந்தப் பேட்டியில், "எனக்கு வில்லனா நடிக்குறது ரொம்ப பிடிக்கும். வில்லனா பயம் காட்டுறது எப்படி ரொம்ப கஷ்டமோ அதவிட ரொம்ப கஷ்டம் மத்தவங்கள சிரிக்க வைக்குறது. இப்போ யூடியூப் சேனல்ல, தனி ஆளா, க்ரூப்பா, சினிமாவா காமெடி பண்றவங்க ரொம்பவே அதிகமாகிட்டாங்க. நான் எதப் பண்ணிணாலும் கொஞ்சம் சரியா பண்ணனும்னு நெனப்பேன்.

நான் எல்லா படத்துலயும் நடிக்க ஒத்துக்கல. ஏன்னா நான் நடிக்குற படத்துல எனக்கான இடம் இருக்கனும். அதுல என் கேரக்டர் தெரியனும்.

நிறைய கத்துகிட்டேன்

இதுவரைக்கும் வில்லன் ரோல் மட்டும் பண்ணிட்டு இருந்த நான், காமெடி ரோல் பண்றதுக்கும் தயாரா ஆனேன். அந்த சமயத்துல டைரக்டர்ஸ் கூட எனக்கு இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் கொடுக்க முன்வந்தாங்க.

இதுக்காக நான் நிறைய கத்துக்கிட்டேன். எனக்கு தெரிஞ்ச டெரர் வில்லன் பாலைய்யா சார் தான். அவர் மாதிரி வில்லன் யாருமே இல்ல. ஆனா, அவர் சிரிக்க வைக்கணும்னு நெனச்சா அவர மாதிரி சிரிக்க வைக்க யாராலையும் முடியாது.

இவங்க எல்லாம் இன்ஸ்பிரேஷன்

ஊட்டி வரை உறவு, காதலிக்க நேரமில்லை படத்தை எல்லாம் பாத்தா அவர விட காமெடியன் யாரும் இல்லன்னு தோனும். ஹியூமர் சென்ஸ் எல்லாம் அவர் ரத்தத்திலேயே இருக்கும். அவர மாதிரியே தான் ரங்காராவ் சாரும்.

இங்க நிறைய காமெடி நடிகர்கள் இருக்காங்க. அவங்களுக்குள்ள சில நெகட்டிவ் விஷயங்கள் இருக்கும்.. இந்த காலத்துல இருக்க நடிகர்கள் வரை அதை பாக்க முடியுது. இத வெளிப்படையாக சொல்றதால எந்தத் தவரும் இல்ல. அது ஏன் வருதுன்னு கண்டுபிடிக்கவே முடியாது.

நான் நிறைய மூத்த காமெடி நடிகர்களுடன் டிராவல் பண்ணிருக்கேன். நம்பியார் சாரிடம் எவ்வளவு வில்லத்தனம் இருக்குமோ அதே அளவு காமெடியும் இருக்கும். அவரோட கடைசி காலத்துல நிறைய காமெடி படங்கள்ல நடிச்சிருப்பாரு. அத நாம இத்தனை நாளா மறைச்சி வில்லன்னா நடிக்க வச்சிருக்கோம்.

ஆனந்த ராஜ் ஹீரோன்னு சொன்னாங்க

நான் மாநகரக் காவல் படத்தில் நடிச்சப்போ பல பத்திரிகைகள் 4 கலர்சட்டயும் பாட்டும் கொடுத்தா அந்தப் படத்துக்கு ஆனந்த ராஜ் தான் ஹீரோன்னு விமர்சனம் எழுதினாங்க. அத பாத்த உடனே எனக்கு சந்தோஷம். இந்த படத்துல என்னோட வேலைய கரெக்டா பண்ணிருக்கேன்னு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்தப் படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த் சாருக்கு தான் நன்றி சொல்லனும்.

அப்ப நான் வில்லனா இருந்தாலும் என் வேலைய நல்லா பன்றேன், காமெடியனா இருந்தாலும் என் வேலைய நல்லா பண்ணுவேன்னு நெனக்குறேன். என நாய்சேகர் படத்தில் நடித்தது குறித்து சினிமா விகடன் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.