தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Amuthavanan Talks About Actor Seshu Helping Nature

Actor Seshu: ‘சம்பளம் குறைவு.. ஆனால் 30 பேருக்கு திருமணம்’ - சேஷு பற்றி உருக்கமாக பேசிய அமுதவாணன்!

Aarthi Balaji HT Tamil
Mar 16, 2024 01:42 PM IST

Actor Amuthavanan: சேஷு அண்ணா எல்லாருக்குமே உதவி செய்வார். சிரிக்க வைப்பதை தாண்டி உதவி செய்யும் குணம் அவருக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது என நடிகர் அமுதவாணன் கூறினார்.

சேஷு
சேஷு

ட்ரெண்டிங் செய்திகள்

குறிப்பாக சந்தானம் கூட இந்த நிகழ்ச்சி மூலமாக தான் வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

இதனிடையே லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ஒருவர் தான் நடிகர் சேஷு. இவர் பாரதி ராஜா இயக்கிய மண்வாசனை படத்தில் நகைச்சுவையை மாற்றி கலாய்த்து அசத்தி இருப்பார்.

இவர் பெரும்பாலும் சினிமாவில் சந்தானம் படங்களில் காணப்பட்டார். இதனிடையே சேஷு நேற்று ( மார்ச் 15) மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் .

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் சேஷு பற்றி நடிகர் அமுதவாணன், India glitz Tamil யூ -டியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். 

அவர் கூறுகையில், “ சேஷு அண்ணா எல்லாருக்குமே உதவி செய்வார். சிரிக்க வைப்பதை தாண்டி உதவி செய்யும் குணம் அவருக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது.

சேஷு அண்ணா பெரிய வேலை எல்லாம் பார்க்கவில்லை. சின்ன சின்ன வேலை செய்வார். அதில் வரும் வருமானங்களை வைத்து பல பேருக்கு உதவி செய்து உள்ளார். நானே நிறைய இடத்தில் பார்த்து இருக்கிறேன். என்னை பல இடங்களுக்கு அழைத்து சென்று இருக்கிறார். நிகழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், நீ சென்று உதவி செய் என சொல்லுவார்.

சேஷு அண்ணாவை பார்த்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். லொள்ளு சபா நிகழ்ச்சி சற்று டல்லாக சென்ற நாட்கள் கூட இருந்தது. அப்போது சின்ன சின்ன நிகழ்ச்சிகளுக்கு சென்று சின்ன சின்ன குழந்தைகளுக்கு உதவி செய்தார்.

கொரோனா காலத்தில் நிறைய விழுப்புணர்வு செய்தார். திருமணம் செய்ய முடியாமல் வறுமையில் இருந்த 30 பேருக்கு திருமணம் செய்தார். பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுப்பார். அப்போது தான் அவருக்கு பெரிய சந்தோஷமே கிடைக்கிறது “ என்றார். 

சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலருக்கு மாரடைப்பு வருவது அடிக்கடி வரும் கதையாகி வருகிறது . உணவு, தூக்கத்தை மறந்து படப்பிடிப்பில் பங்கேற்பதால் இதுபோன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது . 

2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் மாரடைப்பால் மரணமடைந்தனர் . இதனால் மற்றவர்கள் தங்கள் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

’ லொள்ளு சபா ’ நிகழ்ச்சி மூலமாக நடிகர் ஷேஷு பிரபலமாக மாறி இருந்தாலும், அவர் அதற்கு முன்பாக சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியின் மூலம், கலை உலகில் தனது பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: India glitz Tamil

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்