Pushpa 2 Reloaded: அல்லு அர்ஜூன் வெளியிட்ட வீடியோ! வைப் ஆன ரசிகர்கள்.. மீண்டும் ட்ரெண்டாகும் புஷ்பா ஹேஸ்டேக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2 Reloaded: அல்லு அர்ஜூன் வெளியிட்ட வீடியோ! வைப் ஆன ரசிகர்கள்.. மீண்டும் ட்ரெண்டாகும் புஷ்பா ஹேஸ்டேக்

Pushpa 2 Reloaded: அல்லு அர்ஜூன் வெளியிட்ட வீடியோ! வைப் ஆன ரசிகர்கள்.. மீண்டும் ட்ரெண்டாகும் புஷ்பா ஹேஸ்டேக்

Malavica Natarajan HT Tamil
Jan 12, 2025 04:17 PM IST

Pushpa 2 Reloaded: புஷ்பா 2 திரைப்படத்தின் ரீலோடட் வெர்ஷனுக்கான சில காட்சிகளை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ளார்.

Pushpa 2 Reloaded: அல்லு அர்ஜூன் வெளியிட்ட வீடியோ! வைப் ஆன ரசிகர்கள்.. மீண்டும் ட்ரெண்டாகும் புஷ்பா ஹேஸ்டேக்
Pushpa 2 Reloaded: அல்லு அர்ஜூன் வெளியிட்ட வீடியோ! வைப் ஆன ரசிகர்கள்.. மீண்டும் ட்ரெண்டாகும் புஷ்பா ஹேஸ்டேக்

புஷ்பா 

2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் படத்தை 2019ம் ஆண்டு தொடங்கினார். இதையடுத்து 2024ஆம் ஆண்டு வெளியாகும் புஷ்பா 2: தி ரூல் படத்தை 2022ம் ஆண்டு தொடங்கினார். இதையடுத்து புஷ்பா படத்தின் 3ம் பாகமான புஷ்பா தி ரேம்பேஜ் படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில், புஷ்பா படத்தின் காட்சிகளை விவரிக்கும் பொருட்டு புஷ்பா 2 தி ரூல் படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகளை இணைத்து ஜனவரி 17ம் தேதி முதல் தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக அப்படக்குழு தெரிவித்தது.

டைரக்டர் பிறந்தநாள் ட்ரீட்

இதற்கிடையில், நேற்று ஜனவரி 11 அன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடிய புஷ்பா பட இயக்குநருக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக புஷ்பா 2: தி ரூல் ரீலோடட் படத்தின் ஒரு பார்வையை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டார்.

புஷ்பா ராஜாக அவரது காட்சிகளும், ஃபஹத் பாசில் பன்வர் சிங் ஷேகாவத்தாக நடிக்கும் காட்சிகளும் குறுகிய டீஸரில் இடம்பெற்றது. புஷ்பா 2: தி ரூல் படத்தின் தொடக்க சண்டைக் காட்சிக்கு இது ஒரு விளக்கத்தையும் அளிக்கிறது.

ரசிகர்களுக்கு ஆர்வம் தந்த டீசர்

புஷ்பா ராஜ் எங்கே? என்ற தலைப்பிலான ஒரு வீடியோவும் வெளியானது. அதில், படத்தில் புஷ்ப ராஜ் இறந்துவிட்டதாக கூறிய பின் அவர் தலைமறைவாக இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்தக் காட்சிகளுக்கான விளக்கத்தை படக்குழு அளிக்கவில்லை. அதனால் இந்தக் காட்சிகள் புஷ்பா 3: தி ரேம்பேஜ் படத்திற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

ஜப்பானில் அமைக்கப்பட்ட சில காட்சிகளும் இந்த டீசரில் இருந்தது. இந்க புதிய காட்சிகள் படத்தில் உள்ள காட்சிகளைப் பற்றி மேலும் ஆராய உதவுகின்றன.

புஷ்பா 2: தி ரூல் ரீலோடட்

புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் 32 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1831 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில், ஜனவரி 17ம் தேதி முதல் படத்தில் 20 நிமிட கூடுதல் காட்சிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த காட்சிகள் முதலில் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளிப்போனதாக தெரிவித்தது.

புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுடன், ரஷ்மிகா மந்தனா, ஜகபதி பாபு, ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, தனஞ்செயா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பாரத்வாஜ் மற்றும் அஜய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.