Ajithkumar: ‘அணியின் நலன் கருதி’ ; ரேஸில் இருந்து விலகும் அஜித்!;அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! - காரணம் என்ன தெரியுமா?
அணியின் நலன் கருதி அஜித்குமார், துபாய் 24H கார் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Ajithkumar: ‘அணியின் நலன் கருதி’ ; ரேஸில் இருந்து விலகும் அஜித்!; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! - காரணம் என்ன தெரியுமா
துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24H கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் தன்னுடைய அஜித்குமார் ரேஸிங் அணியுடன் பங்கேற்று இருக்கிறார். இந்த கார் ரேஸானது இன்றைய தினம் தொடங்கிய நிலையில், ரேஸூக்கான ஆடைகள் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு அஜித் வெளியே வந்தார்.
அப்போது அவரை காண வந்திருந்த அவரின் ரசிகர்கள், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். இந்த நிலையில், அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில், அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
