Vidaamuyarchi: சாட்டிலைட் சன் டிவி; ஓடிடி நெட்ஃபிளிக்ஸ்; இப்ப இவங்களா; அப்ப மொத்த தியேட்டரும்..ஜெயன்ட் உடன் இணைந்த அஜித்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi: சாட்டிலைட் சன் டிவி; ஓடிடி நெட்ஃபிளிக்ஸ்; இப்ப இவங்களா; அப்ப மொத்த தியேட்டரும்..ஜெயன்ட் உடன் இணைந்த அஜித்

Vidaamuyarchi: சாட்டிலைட் சன் டிவி; ஓடிடி நெட்ஃபிளிக்ஸ்; இப்ப இவங்களா; அப்ப மொத்த தியேட்டரும்..ஜெயன்ட் உடன் இணைந்த அஜித்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jan 20, 2025 06:44 PM IST

Vidaamuyarchi: விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்று இருக்கும் நிலையில், ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கி இருக்கிறது.

Vidaamuyarchi: சாட்டிலைட் சன் டிவி; ஓடிடி நெட்ஃபிளிக்ஸ்; இப்ப இவங்களா; அப்ப மொத்த தியேட்டரும்..ஜெயன்ட் உடன் இணைந்த அஜித்
Vidaamuyarchi: சாட்டிலைட் சன் டிவி; ஓடிடி நெட்ஃபிளிக்ஸ்; இப்ப இவங்களா; அப்ப மொத்த தியேட்டரும்..ஜெயன்ட் உடன் இணைந்த அஜித்

விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்று இருக்கும் நிலையில், ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கி இருக்கிறது. விடாமுயற்சி படத்திற்கு சென்சார் யூ/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கும் நிலையில், இந்தப்படம் 2 மணி நேரம் 30 நிமிடம் 46 நொடிகள் ஓடக்கூடியதாக வந்திருக்கிறது.

விடாமுயற்சி படம்

நடிகர் அஜித் குமார்- திரிஷா கூட்டணியில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. ஆங்கிலத்தில் வெளியான பிரேக் டவுன் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த தேதியில் இருந்து பின்வாங்கியது. அதன் பின்னர் இந்த திரைப்படம் பிப்ரவரி 6 ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பிரேக் டவுன் படக்குழுவுடன் ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாகவே படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையின் காரணமாக விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதிக்கு ரிலீஸ் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து பேசிய விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி, விடாமுயற்சி திரைப்படம் என்னுடைய கதை இல்லை. கணவன் - மனைவிக்குள் நடக்கும் விஷயங்களை ஆக்‌ஷனோடு கலந்து சொல்லி இருக்கிறேன் என்று கூறினார். முன்னதாக இந்தப்படத்தில் இருந்து வெளியான சவாதீகா பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் வெளியான விடாமுயற்சி பாடலும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

முன்னதாக, மகிழ் திருமேனிக்கும், அஜித்திற்கும் இடையேயான சண்டை, தயாரிப்பு நிறுவனத்தின் பணநெருக்கடி உள்ளிட்ட காரணங்களினாலே படம் தாமதமாகிறது உள்ளிட்ட செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், இது குறித்து அஜித், மகிழ்திருமேனியிடம் கூறியதை டான்ஸ் மாஸ்டர் கல்யாண் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார்.

படம் மட்டும் ஹிட் ஆனால்?

இது குறித்து அவர் பேசும் போது, ‘ மகிழ் திருமேனிக்கும், அஜித்திற்கும் இடையே சண்டை; அதனால்தான் படம் தாமதம் ஆகிறது உள்ளிட்ட வதந்திகளுக்கு அஜித் மகிழ்திருமேனியிடம் அஜித் ஒரு விஷயம் சொன்னார். அது என்னவென்றால், படம் மட்டும் ஹிட் அடித்து விட்டால், இதையெல்லாம் பற்றியெல்லாம் யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள்; ரசிகர்கள் உன்னை பாராட்டுவார்கள்; ஆகையால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், நீ உன்னுடைய வேலையை மட்டும் சிறப்பாக செய். படத்தை முடித்து மக்களிடம் கொடு; அதன் பின்னர் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று கூறியிருக்கிறார்.’ என்று பேசினார்.

அஜித் உடல்எடை குறைத்தது குறித்து பேசும் போது, ‘ அவர் முன்பிருந்தே உடம்பை குறைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்; இந்த நிலையில் திடீரென்று அவரை ஒல்லியாக பார்த்தவுடன் எனக்கு ஷாக் ஆகிவிட்டது. அப்படியே பில்லாவில் பார்த்த அஜித் போல இருந்தார்.

நான் அவரிடம் இதை இப்படியே கொண்டு செல்லுங்கள் சரியாக இருக்கும்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினேன். அதற்கு அவர், கண்டிப்பாக செய்ய வேண்டும்…. செய்ய வேண்டும் என்று சொன்னார். அவர் கடுமையாக உழைக்கிறார்.

ஒரு பக்கம் ரேஸ், இன்னொரு பக்கம் ஃபேமிலி, மற்றொரு பக்கம் படப்பிடிப்பு என பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறார்; எனக்குத் தெரிந்து அவர் தினமும் 3 - 4 மணி நேரம்தான் தூங்குகிறார். திரிஷாவும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தார். அவர்கள் இரண்டு பேரையும் கிரீடம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் பார்த்தது போலவே இருந்தது. அவர்களது கெமிஸ்ட்ரியும் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.' என்று பேசினார்.