தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Ajithkumar Paying His Respects To Late Actor Vijayakanth Tomorrow

Ajithkumar: விஜயகாந்த் இறப்பு;வெளிநாட்டு பெண்ணுடன் ஆட்டம்; வாரி இறைத்த விமர்சனங்கள்;நினைவிடத்திற்கு ஓடி வரும் அஜித்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 05, 2024 05:05 PM IST

அந்த வகையில் அண்மையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய கார்த்தி விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியாதது தன்னுடைய வாழ்நாள் குறையாக இருக்கும் என்று பேசினார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

சில முன்னணி நடிகர்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்ததால், அவர்களால் விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனையடுத்து பல பிரபலங்கள் அதன் பின்னர் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய கார்த்தி விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியாதது தன்னுடைய வாழ்நாள் குறையாக இருக்கும் என்று பேசினார். இன்று நடிகர் சூர்யா விஜயகாந்த் நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தி கதறி அழுதார்.

நடிகர் விஜய் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், நடிகர் அஜித் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராமல் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. 

கூடவே, அவர் துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு பெண் ஒருவருடன் ஆட்டம் போட்ட வீடியோ வைரல் ஆன நிலையில், பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், நடிகர் அஜித் நாளை விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த அஞ்சலி செலுத்த இருப்பதாக பிரபல விமர்சகர் அந்தணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.