தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Ajith Movie Producer Sivasakthi Pandian Arrested

Sivasakthi Pandian: அஜித் பட தயாரிப்பாளர் புழல் சிறையில் அடைப்பு.. காரணம் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 26, 2024 09:04 PM IST

சிவசக்தி பாண்டியன் மீது நிதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

சிவசக்தி பாண்டியன்!
சிவசக்தி பாண்டியன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக, பிரபல நிறுவனம் ஒன்றில், 1 கோடியே 70 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். 

அந்த பணத்திற்காக அவர் காசோலைகளை கொடுத்து இருக்கிறார். ஆனால் பணம் இல்லாமல் காசோலை திரும்பி விட்டது. இதையடுத்து அந்த நிறுவனம், சிவசக்தி பாண்டியன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது

அதில் குற்றசாட்டு நிரூபணம் ஆன நிலையில், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு கால அவகாசம் வழங்கி பணத்தை திருப்பிக்கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் சிவசக்தி பாண்டியனோ பணத்தை திருப்பிக்கொடுக்க வில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரின் வீட்டில் வைத்து கைதுசெய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்