Vidaamuyarchi Release: இறுதி செய்யப்பட்டதா விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி! தீயாய் பரவும் தகவல்..
Vidaamuyarchi Release: பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போன விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதமே வெளியாகும் என சோசியல் மீடியா முழுவதும் தகவல் தீயாய் பரவி வருகிறது.
Vidaamuyarchi Release: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார்- திரிஷா நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படம் படப்பிடிப்பு சமயத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்தது. மேலும், குறிக்கப்பட்ட நாளை விட படப்பிடிப்பு மிகவும் தள்ளிப் போனது.
இதனால், விடாமுயற்சி படம் குறித்தும் நடிகர் அஜித் குமார் குறித்தும் பல வதந்திகள் பரப்பப்பட்டது. இயக்குநருடன் அஜித்திற்கு சண்டை வந்ததால் தான் அஜித் வேண்டுமென்றே படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஷூட்டிங்கை வைத்துக் கொண்டு ஊர் ஊராக பைக்கிலும் காரிலும் சுற்றி வரவும் அதுதான் காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது.
விடாமுயற்சி அப்டேட்
இந்நிலையில். விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. அதுமட்டுமின்றி, அஜித் ரசிகர்கள் குஷியாக்கும் விதமாக டீசர், முதல் சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து வந்தது.
லைகாவின் அதிர்ச்சி அறிவிப்பு
இந்த அறிவிப்புகளால் குஷியாக இருந்த அஜித் ரசிகர்களை ஒரே ட்விட் மூலம் ஆஃப் செய்துள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கையோடு, அதே பதிவில் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப் போகிறது என்றும் கூறி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஆப்பு வைத்தது. இதைக் கண்ட ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
தணிக்கை சான்றிதழ்
இதற்கிடையில் விடாமுயற்சி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என பலரும் கூறி வந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியானதாகவும், அந்த சான்றிதழின் படி யுஏ பிரிவில் வெளியாகும் இப்படம் 2.30 மணி நேரம் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது.
ஜனவரியில் ரிலீஸ்
இந்நிலையில், விடாமுயற்சி படம் இம்மாத இறுதியிலேயே வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக படம் வரும் ஜனவரி 23ம் தேதி நிச்சயம் திரைக்கு வரும் என்றும் அஜித் ரசிகர்கள் பலர் ஆணித்தரமாக கூறி வருகின்றனர்.
காத்திருக்கும் ரசிகர்கள்
கடந்த ஆண்டு தீபாவளிக்கே நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அது நடக்காமல் போனது. பின் படக்குழுவினர் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் நிச்சயம் ரிலீஸ் ஆகும் எனக் கூறி இருந்தனர்.
பொங்கலிலும் தள்ளிப் போன ரிலீஸ்
ஆனால், படம் வெளியாவதில் பல சிக்கல் இருப்பதாக தகவல் வெளியானது. விடாமுயற்சி படம் பிரேக் டவுன் என்ற படத்தின் தழுவல் என்றும். அந்தப் படக்குழு விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறும் கட்டாயப்படுத்தியதாக தகவல்கள் பரவியது.
இயக்குநருடன் தகராறு
அதேசமயம், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் உள்ள கருத்து வேறுபாடு தான். அவர்கள் இருவரும் ஒத்து வராததால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் பலரும் கூறினர். ஆனால், இந்த தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமானவை அல்ல.
சவதீகா பாடல்
இப்படியே நாளுக்கு நாள் விடாமுயற்சி படம் குறித்த வதந்திகள் அதிகமாகிக் கொண்டிருந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பாடலில் மிகவும் கிளாஸி தோன்றத்தில் அஜித் மற்றும் திரிஷா காணப்பட்டனர். இந்தப் பாடலின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திற்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்ததாகவும் அவர் மற்றவர்களின் வேலை கெடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பிடிப்பின் போது மிகவும் மெனக்கெட்டார் என்றும் நடன இயக்குநர் கூறினார்.
லைகா மீது விமர்சனம்
லைகா நிறுவனம் வேண்டுமென்றே திட்டம் போட்டு படத்தை பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளி வைத்து அஜித்தை பழி வாங்கியதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
அதேசமயம், அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸில் இருந்து விலகியதால், பல சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்துள்ளதும் கவனிக்க வேண்டிய ஒன்று.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்