Vidaamuyarchi 2nd Single: நாளை பற்றிக் கொள்ள போகும் யூடியூப்.. 2வது சிங்கிளை அறிவித்த விடாமுயற்சி டீம்!
Vidaamuyarchi 2nd Single: நடிகர் அஜத் குமாரின் விடாமுயற்சி படத்திலிருந்து 2வது பாடலை படக்குழுவினர் நாளை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vidaamuyarchi 2nd Single: நடிகர் அஜித் குமார்- திரிஷா கூட்டணியில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்த நிலையில், தற்போது முக்கிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
2வது பாடல் ரிலீஸ்
லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், விடாமுயற்சி படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாகக் கூறியுள்ளது. அந்த அறிவிப்பில் விடாமுயற்சி படத்தின் 2ம் பாடலுக்கு பத்திக்கிச்சு என பெயரிடப்பட்டுள்ளது தெரிகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்தப் பாடல் மிகவும் துள்ளலாக இருக்கும் எனத் தெரிகிறது. பத்திக்கிச்சு பாடலை அனிருத்தே பாடியுள்ளார், அவருடன் இணைந்து யோகி சேவும் இப்பாடலை பாடியுள்ளது தெரிகிறது.
கைதி, விக்ரம், மாஸ்டர் படங்களில் பணியாற்றிய விஷ்ணு எடாவன் விடாமுயற்சி படத்தின் பத்திக்குச்சு பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் ராப் பாடல், இசையுடன் பாடப்பட உள்ளது.
பாடல் ரிலீஸ் எப்போது?
அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் 2வது பாடலானது நாளை அதாவது ஜனவரி 19ம் தேதி காலை 10.45 மணிக்கு வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் அடுத்த அதிரடி பாடலைக் கேட்க தயாராக இருக்குமாறு படக்குழு அறிவித்து போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் சிங்கிள்
முன்னதாக விடாமுயற்சி படத்தில் சவதீகா பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரபேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையில், அந்தோணிதாசன் பாடிய அந்த பாடல் மிகவும் துள்ளலாகவும், அஜித் குமாரின் கிளாஸிக் நடன அசைவுகளாலும் அதிகம் பேரால் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி, படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மாபெரும் ஊக்கமாக இருந்தது அந்தப் பாடல்.
விடாமுயற்சி ரிலீஸ்
முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழு டிரைலர் ரிலீஸில் அறிவித்துள்ளது. இதையடுத்து, பல திரைப்படங்கள் அதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து வருகின்றன. மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குஷியில் ரசிகர்கள்
அஜித் குமாரின் விடாமுயற்சி படம் படப்பிடிப்பின் போதே பல்வேறு காரணங்களால் தள்ளித் தள்ளி போனது. இதன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதற்கு பல்வேறு கராணங்களும் கூறப்பட்டு வந்தது. இவற்றிற்கு எல்லாம் படக்குழுவிடமிருந்து எந்த விளக்கமும் இல்லாத நிலையில், 2025 பொங்கல் ரேலீஸ் களமிறங்கியது விடாமுயற்சி. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.
ஆனால், அதை குழைக்கும் வகையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புத்தாண்டு வாழ்த்து சொல்லி தெரிவித்தது. இதனால் மூட் அவுட்டில் இருந்த ரசிகர்கள் விடாமுயற்சி ரிலீஸிற்கு காத்திருந்த நிலையில், டிரெயிலர் வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்தது படக்குழு.
தேதி குறிச்ச படக்குழு
இதையடுத்து, விடாமுயற்சி படத்தின் ரிலீஸில் தீவிரம் காட்டி வந்க படக்குழு வரும் பிப்ரவரி 6ம் தேதி படத்தை உலகம் முழவதும் உள்ள தியேட்டர்கலில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்