Vidaamuyarchi: நாளை வெளியாகும் விடாமுயற்சி.. படத்தில் இதெல்லாம் ஸ்பெஷலா? அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் தான்..
Vidaamuyarchi: நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் முக்கியமான அம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Vidaamuyarchi: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்களில் ஒருவரான பத்ம பூஷண் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிக அதிகமாக உள்ளது. அஜித் குமாரின் ஒவ்வொரு படமும் தனித்துவமானதாக இருக்கும், விடாமுயற்சியும் அப்படித்தான். இந்தப் படம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள் இங்கே செய்தித் தொகுப்பாக தரப்பட்டுள்ளது
2 ஆண்டுகளுக்குப் பின் படம் ரிலீஸ்
ஜனவரி 2023 இல் வெளியான துணிவு படம் தான் அஜித்தின் கடைசி தியேட்டர் ரிலீஸ் படம். அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புதிய படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக அஜித் குமார் 121 நாட்கள் அர்ப்பணிப்புடன் உழைத்ததாகவும், ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல படத்தை வழங்க அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ப்ரேக் டவுன் ரீமேக்
இந்தப் படம் 1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் கிரைம் திரில்லர் படமான ப்ரேக் டவுன்- இன் ரீமேக் ஆகும். கர்ட் ரஸ்ஸல் நடித்த இந்தப் படத்தை ஜோனாதன் மோஸ்டோ எழுதி இயக்கியுள்ளார். மகிழ் திருமேனி தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இந்தப் படத்தை மாற்றியிருந்தாலும், படத்தின் அடிப்படை கதை ப்ரேக் டவுன் படத்தைப் போன்றது. ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.
அஜித் குமாரும் ஆக்ஷனும்
கோலிவுட் நட்சத்திரமான அஜித் குமார், குறிப்பாக பைக் சண்டைக் காட்சிகளுக்காக ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்படுபவர். இந்தப் படத்தில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அஜித் கடினமான சண்டைக் காட்சிகளில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைத்தார் என்பதை அவை காட்டுகின்றன. ரேஸ் கார் காட்சி உட்பட சில ஆபத்தான சண்டைக் காட்சிகளில் அவர் நடித்துள்ளார். அது படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
த்ரிஷா
10 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் அஜித் குமார் மற்றும் த்ரிஷா மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக த்ரிஷா தன் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவநர்ந்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு வெளியான கௌதம் வாசுதேவ் மேனனின் என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு, அஜித் குமாரும் த்ரிஷாவும் ஐந்தாவது முறையாக இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
வில்லனாக அர்ஜுன்
தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நடிகர் அர்ஜுன். 62 வயதான அர்ஜுன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவர் முன்பு வில்லன் வேடங்களில் நடித்திருந்தாலும், இப்படத்தில் ரக்ஷித் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்திற்குப் பிறகு, அதாவது 14 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் மற்றும் அர்ஜுன் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
அனிருத் இசை
அனிருத் தன் இசையால் இந்திய மக்களை கட்டிப் போட்டுள்ள நிலையில், இவர் மூன்றாவது முறையாக அஜித் படத்திற்கு இசையமைத்துள்ளார். வேதாளம் (2015) மற்றும் விவேகம் (2017) படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் இசையும் தற்போது ரசிகர்களின் டாப் சார்ட்டில் ஏற்கனவே இடம் பிடித்துள்ளது.
மகிழ் திருமேனி கூட்டணி
முதல் முறையாக அஜித் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். இவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குநராக இருந்த மகிழ் திருமேனி, ஐந்து படங்களை இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் வகையைச் சேர்ந்த படங்களை இயக்குவதில் அவர் தேர்ச்சி பெற்றவர். விடாமுயற்சியும் அப்படிப்பட்ட கதையாகத் தான் உள்ளது.
புதிய வெளிநாட்டு இடம்
முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் அஜர்பைஜானில் நீண்ட காலம் படமாக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் இரண்டு நீண்ட அட்டவணைகள் (மூன்று மாதங்கள்) கிழக்கு ஐரோப்பிய நாட்டில் நடைபெற்றது. கடற்கரைப் பகுதியையும், மலைப்பகுதியையும் கொண்ட அஜர்பைஜான், பல்வேறு வகையான இடங்களை வழங்கியது. படத்தின் பிடிஎஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் இருந்து பார்க்கும்போது, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அளித்துள்ள காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்