திரையரங்கம் சிதற.. பொடுசுங்க கதற.. விசில் பறக்க வெளியானது அஜித்தின் 'ஓஜி சம்பவம்' வீடியோ சாங்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திரையரங்கம் சிதற.. பொடுசுங்க கதற.. விசில் பறக்க வெளியானது அஜித்தின் 'ஓஜி சம்பவம்' வீடியோ சாங்..

திரையரங்கம் சிதற.. பொடுசுங்க கதற.. விசில் பறக்க வெளியானது அஜித்தின் 'ஓஜி சம்பவம்' வீடியோ சாங்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 21, 2025 07:27 PM IST

குட் பேட் அக்லி படத்தில் ரசிகர்களை வெறியேற வைத்த ஓஜி சம்பவம் வீடியோ பாடலை டி-சீரிஸ் வெளியிட்டுள்ளது.

திரையரங்கம் சிதற.. பொடுசுங்க கதற.. விசில் பறக்க வெளியானது அஜித்தின் 'ஓஜி சம்பவம்' வீடியோ சாங்..
திரையரங்கம் சிதற.. பொடுசுங்க கதற.. விசில் பறக்க வெளியானது அஜித்தின் 'ஓஜி சம்பவம்' வீடியோ சாங்..

ஓஜி சம்பவம்

ஜிவி பிரகாஷ் ஓஜி சம்பவம் பாடலை இசையத்து பாடியுள்ளார். இவருடன் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் பாடியுள்ளார். மாஸ் வசனங்கள் தெறிக்க தெறிக்க உள்ள இந்தப் பாடலை விஷ்ணு எழுதியுள்ளார்.

ஃபிரேம் பை ஃபிரேமாக கொண்டாடும் மக்கள்

இந்த பாடலானது ஹை வோல்டேஜ் எலிவேஷன் ட்ராக்காக இருக்கும். அது மாஸான கூறுகளும் கொண்ட ஒரு நபரைப் பற்றிய ஒரிஜினல் சம்பவமாக இருக்கும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறி இருந்தார். அதற்கு தகுந்தாற் போல, ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர். லிரிக்கல் வீடியோவையே பிரேம் பை பிரேமாக கொண்டாடி வந்தவர்கள், தற்போது வீடியோ பாடலையும் வைப் செய்து வருகின்றனர்.

ஃபுல் எனர்ஜியில் ஃபேன்ஸ்

குட் பேட் அக்லி படம் வெளியான சமயத்தில் இருந்தே அஜித் ரசிகர்கள் ஃபுல் எனர்ஜியில் உள்ளனர். அஜித்தின் ஒவ்வொரு லுக்கையும், ஒவ்வொரு வசனத்தையும் கொண்டாடியவர்கள், அஜித்தையே கொண்டாடும் பாடல் கிடைத்தால் சும்மா விடுவார்களா?. குட் பேட் அக்லி படத்தின் பாடல்கள் யூடியூபிலும், ஸ்பாட்டிவை போன்க தளங்களிலும் மட்டுமல்ல ரீல்ஸ்களிலும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் பாட்டில் உள்ள துள்ளலான இசை குழந்தைகளையும் விரும்பிக் கேட்க வைக்கிறது.

குட் பேட் அக்லி படம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அர்ஜூன் தாஸ் வில்லனாக நடித்துள்ளார். அவர்களுடன் பிரசன்னா, சுனில், சிம்ரன், பிரியா வாரியார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.