Good Bad Ugly Movie: தியேட்டரில் தகராறு.. நிறுத்தப்பட்ட குட் பேட் அக்லி படம்! என்ன ஆச்சு தெரியுமா?
Good Bad Ugly Movie: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில், குட் பேட் அக்லி படம் திரையிடப்பட்ட சமயத்தில் ஏற்பட்ட தகராறால் படம் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Good Bad Ugly Movie: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படம் ரசிகர்களின் தகராறுகளால் அடிக்கடி செய்தியில் இடம் பிடித்து வருகிறது.
விஜய் ரசிகர்களுடன் கைகலப்பு
முன்னதாக, குட் பேட் அக்லி படம் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் விஜய் ரசிகர்கள் டிவிகே, டிவிகே என நடிகர் விஜய்யின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பெயரை கூறி கத்தியதால் தியேட்டரில் கைகலப்பு ஏற்பட்டது.
பிரச்சனையில் சிக்கிய வெற்றி தியேட்டர்
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபலமான திரையரங்கமான வெற்றி தியேட்டர் தற்போது குட் பேட் அக்லி படத்தின் திரையிடலின் போது பிரச்சனை ஒன்றில் சிக்கியுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் அஜித் குமாரின் ரசிகர்கள் எல்லாம் குட் பேட் அக்லி படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த மிரர் பால் லைட் அங்கிருந்த பெண் ரசிகையின் தலையில் விழுந்தது.
வலியில் துடித்த ரசிகை
இதை சற்றும் எதிர்பாராத ரசிகை வலியால் துடித்ததால் அவருடன் படம் பார்க்க வந்தவர்கள் எல்லாம் தியேட்டர் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் இருந்து சண்டையிட்டுள்ளனர்.
அப்போது, தியேட்டர் நிர்வாகத்திடம் தியேட்டரில் குச்சி வைத்து லைட் பால் கட்டியது ஏன், இது குழந்தைகள் மீது எல்லாம் விழுந்திருந்தால் எப்படி தாங்கிக் கொள்வார்கள், அடிபட்ட பெண்ணிற்கு பெரிதாக காயம் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும் என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து சண்டையிட்டனர்.
நிறுத்தப்பட்ட குட் பேட் அக்லி படம்
இதனால், திரையரங்கில் குட் பேட் அக்லி படம் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின் சமாதான பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் தான் படம் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.
பின், இந்த விவகாரம் குரித்து குரோம்பேட்டை காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீனி போட்ட அஜித்
நீண்ட நாட்களாக அஜித்தை ரசிகர்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ அதனை அப்படியே திரையில் காண்பித்து இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். கோட் சூட், நெகட்டிவ் லுக், மாஸ் டயலாக்ஸ், ஸ்லோ மோஷன் வாக் என மொத்தமாக அஜித்தின் ராஜாங்கம் திரையை அலற விட்டு இருக்கிறது. அப்பாவுக்கான எமோஷனிலும் அஜித் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
'குட் பேட் அக்லி'
'குட் பேட் அக்லி' ஒரு ஆக்ஷன் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது . இதில் அஜித் 'ரெட் டிராகன்' என்ற பயங்கரவாதியாக நடிக்கிறார். பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
