ரெட் டிராகன்.. மரியாதை பிறந்த நாள்.. அஜித் பிறந்தநாளில் பிரபலங்களிடமிருந்து குவியும் வாழ்த்துகள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரெட் டிராகன்.. மரியாதை பிறந்த நாள்.. அஜித் பிறந்தநாளில் பிரபலங்களிடமிருந்து குவியும் வாழ்த்துகள்..

ரெட் டிராகன்.. மரியாதை பிறந்த நாள்.. அஜித் பிறந்தநாளில் பிரபலங்களிடமிருந்து குவியும் வாழ்த்துகள்..

Malavica Natarajan HT Tamil
Published May 01, 2025 01:15 PM IST

நடிகர் அஜித் குமாரின் 54 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏராளமான திரைப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரெட் டிராகன்.. மரியாதை பிறந்த நாள்.. அஜித் பிறந்தநாளில் பிரபலங்களிடமிருந்து குவியும் வாழ்த்துகள்..
ரெட் டிராகன்.. மரியாதை பிறந்த நாள்.. அஜித் பிறந்தநாளில் பிரபலங்களிடமிருந்து குவியும் வாழ்த்துகள்..

எஸ்.ஜே. சூர்யா வாழ்த்து

மே 1 உழைத்தால் அதிசயம் பிறக்கும் என்பதை உணர்த்தும் நாள்.. அஜித் சார் பிறந்த நாள்.. கலை உலகில் எனக்கு மரியாதை பிறந்த நாள்.. ஹாப்பி பர்த்டே பத்ம பூஷண் அஜித் சார்.. இனிய உழைப்பாளர் தினம் மற்றும் இந்த எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் வேலையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும் நாள். விரைவில் அப்டேட் வரும்.. காத்திருங்கள் என நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா எக்ஸ் தளத்தில் வாழ்த்து கூறி இருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் வாழ்த்து

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். எல்லையற்ற மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சிறந்த ஆரோக்கியத்துடன் உங்களுக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். ஐ லவ் யூ சார். எல்லாவற்றிற்கும் நன்றி, உங்கள் கருணை மற்றும் அன்பினால் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்குமார் சார். என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு வாழ்த்து

உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான பிறந்தநாள் பத்மபூஷன் ஏகே நா!! நான் வாழ்நாள் முழுவதும் போற்றுகின்ற ஒரு போஸ்டர்!! லவ் யூ நா!! தொடர்ந்து உத்வேகம் அளியுங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என மங்காத்தா படத்தின் போஸ்டரில் அஜித் கையெழுத்தி்ட்ட போஸ்டர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லைகா புரொடக்ஸன்ஸ் வாழ்த்து

எப்போதும் ஸ்டைலான அஜித் குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் கவர்ச்சி, பணிவு மற்றும் ஆர்வம் மில்லியன் கணக்கானவர்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இன்னும் பல சக்திவாய்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் முடிவற்ற வெற்றிகளுக்கு வாழ்த்துகள் என லைகா தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் வாழ்த்து

மாஸ்களின் நாயகன், சக்திவாய்ந்த நடிகன் அஜித் குமாருக்கு வாழ்த்துகள் என் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வாழ்த்து

ரெட் டிராகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. உங்கள் ஆர்வங்களைத் தொடருங்கள்.. நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் பெருமை காணவும் ஒரு அற்புதமான ஆண்டு அமையட்டும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.