Vidaamuyarchi: 'விடாமுயற்சி என் கதையே இல்ல.. படத்த உடனே எடுக்க வேண்டிய கட்டாயம்'- மகிழ் திருமேனி
Vidaamuyarchi: விடாமுயற்சி திரைப்படம் தன் கதையே இல்லை. ஆனால் அந்தப் படத்தின் திரைக்கதையில் என் சிறந்த பங்களிப்பை தந்துள்ளேன் என இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

Vidaamuyarchi: நடிகர் அஜித் குமாரின் 62வது திரைப்படமாக உருவாகிவரும் விடாமுயற்சி வரும் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
விடாமுயற்சியும் பிரச்சனைகளும்
படப்பிடிப்பு தாமதம், ரிலீஸ் தேதியில் சிக்கல், ரசிகர்களின் எதிர்பார்ப்பு என பல்வேறு விஷயங்களை படக்குழு சந்தித்து வரும் நிலையில், அப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி விகடன் பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், " என்னுடைய கலகத் தலைவன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில், அஜித் சாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா என்னை தொடர்புகொண்டு அடுத்து ஏதாவது படத்தில் கமிட் ஆகியிருக்கிறீர்களா எனக் கேட்டார்.
என்னுடன் படம் செய்ய விரும்பிய அஜித்
நான் இல்லை எனக் கூறியதும், அஜித் சார் தங்களுடன் படம் செய்ய விருப்பப்படுகிறார் என்று கூறினார். பின் அஜித் சாரும் அதை உறுதிப்படுத்திய பின், நாங்கள் தயாரிப்பாளரை சந்திக்க லண்டன் சென்றோம். அப்போது தான் முதல் முதலில் அஜித் சாரை சந்தித்தேன். அதுவரை நான் அஜித் சாரின் 63வது படத்தை தான் இயக்க சொல்கிறார்கள் என நினைத்தேன்.
இது என் கதை அல்ல
ஆனால், என்னை 62வது படத்தை எடுக்கச் சொன்னார்கள். எனக்கு அதிக காலமும் இல்லை. இதுதான் நான் என் கதை இல்லாமல் வேறு ஒரு கதையை இயக்குவது முதல் முறை. ஆனால், இந்தப் படத்தின் திரைக்கதையில் என் சிறந்த பங்களிப்பை தந்துள்ளேன். இது எனக்கும், அஜித் சாருக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறோம்.
அஜித் சாருக்கு இதெல்லாம் பிடிக்காது
அஜித் சாருக்கு ஆணாதிக்கமோ, பெண்கள் மீதான வன்முறையோ சுத்தமாக பிடிக்காது. அதுசம்பந்தமான கருத்தை திரையில் சொல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அதனால் இப்படத்தை சிறிது மாற்றம் செய்து எடுத்துள்ளோம். இந்தப் படத்தில் அஜித்திற்கு இணையாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்த போது எங்களுக்கு த்ரிஷா தான் சரியானவர் எனப்பட்டது. அதற்கு த்ரிஷாவும் சம்மதம் தெரிவித்தார்.
கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வந்தோம்
இதையடுத்து, இந்தப் படத்தில் அர்ஜூன் சாரின் கதாப்பாத்திரம் மிகவும் முக்கியமானது மற்றும் வலுவானதும் கூட. மேலும், ஆரவ் சிறய கேரக்டரில் வந்தாலும் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துபவராக இருப்பார். அத்துடன் ரெஜினாவிற்கு இந்தப் படத்திற்கு பின் நிறைய பட வாய்ப்புகள் வரும்.
நான் அஜித் சாரிடம் என்னை ஏன் இந்தப் படத்திற்கு இயக்குநராக வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர் நாம் முதலில் நம்மை சுற்றி இருக்கும் கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே வரவேண்டும். அதற்கு இதை வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
பெண்களுக்கு பிடித்த படம்
விடாமுயற்சி படம் அக்ஷன், அட்வென்சர், சஸ்பெண்ஸ் என அனைத்தும் கலந்த படமாக இருக்கும். இந்தப் படத்தில் அஜித் சார் துறுதுறுப்பாகவும் துல்லலாகவும் இருப்பார். இந்தப் படம் குறிப்பாக பெண்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.
அஜித் சாருக்கு எள்லாம் தெரியும்
அஜித் சார் ஆரம்பத்தில் இருந்தே எங்களுடன் நெருக்கமாக பயணித்து வருவதால், இந்தப் படம் பற்றியும், தன்னைப் பற்றியும் வெளியாகும் விமர்சனங்களை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் எங்களுடனே இருந்ததால் எது உண்மை என அவருக்கு தெரியும்" என்றார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்