Ajith Kumar: பிரான்சில் சீறிப்பாய்ந்து வரும் அஜித் குமார்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் வீடியோக்கள்..
Ajith Kumar: நடிகர் அஜித்தின் ரசிகர்கள் இங்கு அவரது குட் பேட் அக்லி படத்தை கொண்டாடி வரும் நிலையில், அஜித் குமார் பிரான்சில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று வருகிறார்.

Ajith Kumar: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக மாஸ் ஹிட் கொடுத்து வரும் நிலையில், அதனை ரசிகர்களுடன் கொண்டாட கூட நேரம் இல்லாமல் இருக்கிறார் அஜித் குமார். ஏற்கனவே, அவர் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அவசர அவசரமாக படப்பிடிபபுகளை எல்லாம் முடித்துக் கொடுத்த செய்தி நமக்கு தெரியும்.
கார் ரேஸில் பிஸியான அஜித்
ஜனவரியில் தொடங்கிய இவரது வெற்றிப் பயணம் இப்போது பிரான்ஸ் கார் பந்தய போட்டி வரை வந்துள்ளது. ஆம் ரசிகர்கள் எல்லோரும் குட் பேட் அக்லி படத்தை கொண்டாடி வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் ஐரோப்பாவில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய தொடர் பயண போட்டிகளை முடித்து விட்டு தற்போது பிரான்சில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். அதுகுறித்த தகவலையும் வீடியோக்களையும் அஜித்குமார் ரேஸிங் இணையதள பக்கம் தெரிவித்துள்ளது. மேலும் அஜித் குமாரின் மேலாளரான சுரேஷ் சந்திராவும் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜிடி4 கார் பந்தயம்
ஜிடி4 யுரோப்பியன் கார் பந்தயம் என்பது ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து ஆறு மாதங்கள் நடைபெறும் கார் பந்தயம். இந்தப் போட்டிகள், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மணி ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டி, பிரான்சில் உள்ள பால் ரிக்கார்ட் சர்க்யூட்டில் ஏப்ரல் 11 முதல் 13 வரையும், ஜான்ட்வோர்ட் சர்க்யூட்டில் மே 16-18 வரையும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, ஜூன் 26 முதல் 29 வரை ஸ்பா சர்க்யூட்டிலும், ஜூலை 18 முதல் 20 வரை மிசானோ சர்க்யூட்டிலும், அக்டோபர் 10 முதல் 12 வரை பார்சிலோனாவிலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சீறிப் பாய்ந்த கார்கள்
இந்தப் போட்டிக்கா அஜித் குமார் தனது குழுவினருடன் பல்வேறுகட்ட பயிற்சியில் ஈடுபட்டார். அதற்கான வீடியோக்களும், பயிற்சியின் போது அவர் ஓய்வெடுத்த வீடியோக்களும் வெளியாகி வந்த நிலையில், இன்று பிரான்சில் அவரது கார் பந்தயப் போட்டி தொடங்கியுள்ளது.
ஜிடி4 ஐரோப்பாவின் புகழ்பெற்ற கார் பந்தயங்களுள் ஒன்று. இது. ஜிடி4 ஸ்பெக் வாகனங்களைக் கொண்ட ஒரு முதன்மையான ஸ்போர்ட்ஸ் கார் சாம்பியன்ஷிப் தொடர். இது வழக்கமான கார் பந்தயங்களைக் காட்டிலும் மாறுபட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நாட்டிற்கு பெருமை சேர்த்த அஜித்
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், 24ஹெச் துபாய் 2025 கார் பந்தயத்தில் 991 பிரிவில் அஜித்தின் பந்தய அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தது. அதைத் தொடர்ந்து இத்தாலியில் நடந்த தீவிரமாகப் போட்டியிட்ட 12ஹெச் முகெல்லோ கார் பந்தய நிகழ்வில் அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
அஜித் பந்தயத்தில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அவர் அஜித் குமார் ரேசிங் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். அவருடன் மேத்தியூ டெட்ரி, ஃபேபியன் டஃபியக்ஸ் மற்றும் கேமரூன் மெக்லியோட் பந்தயங்களில் பங்கேற்கின்றனர் .

டாபிக்ஸ்