Ajith Kumar: 'நீங்க எப்போ வாழப் போறீங்க? என்னோட சந்தோஷம் இது இல்ல..' - அஜித் ஆவேசம்
Ajith Kumar: அஜித் வாழ்க, விஜய் வாழ்க என சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள் என நடிகர் அஜித் குமார் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ajith Kumar: நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் பங்கேற்றார். அவர் 922 போர்ஷே கார் பிரிவ்ல பங்கேற்று 3ம் இடத்தையும் பிடித்து வெற்றி வாகை சூடினார்.
கொண்டாடிய ரசிகர்கள்
இதையடுத்து, நடிகர் அஜித் குமாரின் வெற்றிக் கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் தங்களுடையது போன்று கொண்டாடி வருகின்றனர். அவர் கார் பந்தயத்தில் பங்கேற்றது தொடங்கி, குடும்பத்துடன் பேசியது, வீரர்களுடன் இருந்தது. பயிற்சி செய்தது, பந்தயத்தில் பங்கேற்றது. அதில் வெற்றி பெற்றது வரை அவரது ரசிகர்கள் ஒவ்வொன்றையும் ஸ்டேட்டஸ்களாக அப்டேட் செய்து வந்தனர்.
இவர் என்ன தான் தன் ரசிகர்களை அவர்களது குடும்பத்தை பார்க்கவும், தொழிலை பார்க்கவும் சொன்னாலும், அவர் இப்படி சொல்வதாலேயே புதிது புதிதாக இன்னும் லட்சக்கணக்கானோர் இவருக்கு ரசிகர்களாக மாறி வருகின்றனர். இவர்களின் பாசப் போராட்டத்தில் சிக்கியுள்ள நடிகர் அஜித் குமார், துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின் அங்குள்ள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர வேண்டும்
அந்தப் பேட்டியில், சமூக வலைதளங்கள் தற்போது மிகவும் அபாயகரமானதாக மாறியுள்ளது. நம் வாழ்க்கை மிகவும் சிறியது. அதில் நாம் ஏன் இவ்வளவு ஆபத்தானவர்களாகவும் கொடிய சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் காணப்படும் வெறுப்பு பேச்சுகல் பிரபலங்கள் மட்டுமல்ல தனிப்பட்ட நபர்களையும் பாதிக்கிறது. எனவே தயவ செய்து பொய்யான கருத்துகளையும் வெறுப்பு கருத்துகளையும் பரப்பாதீர்கள். இவை அனைத்தும் முடிவுக்கு வர பிரார்திக்கிறேன்.
நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?
மற்றவர்கள் உங்களை என்ன சொல்கிறார்கள் என்பதைப் கேட்க காத்திருக்காதீர்கள். அதற்காக நேரமும் செலவிடாதீர்கள். உங்களது முழு கவனமும் உங்களது வாழ்க்கை பற்றியதாகத் தான் இருக்க வேண்டும்.
அஜித் வாழ்க, விஜய் வாழ்க என எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். இப்படி இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? நம் எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும். நாம் நிகழ்காலத்தில் வாழ விரும்பினால் அடுத்தவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதுதான் எனக்கு மகிழ்ச்சி
நான் உங்கள் அன்பிற்கு கடமைப்பட்டவன். ஆனால், ரசிகர்களாகிய நீங்கள் தயவு செய்து உங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டும். என் ரசிகர்கள் அனைவரும் நன்றாக இருப்பதை நான் தெரிந்து கொண்டால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்.
சிலர் மிகவும் பொறுப்பற்று வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குகிறார்கள். இதனால், அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளார்.
பட்டம், கோஷங்கள் வேண்டாம்
முன்னதாக, ரசிகர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கடவுளே அஜித்தே என கோஷம் போட்டு வந்தனர். இந்த விவகாரம் நடிகர் அஜித்தின் காதுகளுக்கு சென்றதை அடுத்து, அவர் இதனை வன்மையாக கண்டித்தார். இது தனக்கும் பிறருக்கும் வருத்தத்தை தருவதாகவும் கூறினார். இனி இந்த மாதிரி மிகைப்படுத்தி பேச வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி, சில நாட்களுக்கு முன்பு தன் ரசிகர்கள் தன்னை தல என அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார். தன்னை அஜித் குமார் என்றோ ஏகே என்றோ கூப்பிட்டால் போதும் எனவும் கூறியிருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்