இதுக்கு மேல முடியாது.. முடிவு பண்ணிய குட் பேட் அக்லி டீம்.. அஜித் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன அறிவிப்பால் துவண்டு கிடந்த நடிகர் அஜித் ரசிகர்களுக்கு எனர்ஜி தரும் அப்டேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார்- த்ரிஷா நடித்து வரும் திரைப்பட் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், அப்படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தள்ளிப்போன விடாமுயற்சி ரிலீஸ்
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார்- திரிஷா நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படம் படப்பிடிப்பு சமயத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்ததால் குறிப்பிட்ட நாளை விட படப்பிடிப்பு மிகவும் தள்ளிப் போனது. இதனால், தீபாவளி ரிலீஸிற்கு திட்டமிடப்பட்டிருந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப்போய் வந்த நிலையில், படக்குழுவினர் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவித்தனர்.
குட் பேட் அக்லி ரிலீஸ் எப்போது?
இந்த அறிவிப்பால் குஷியில் கிடந்த ரசிகர்களை புத்தாண்டு வாழ்த்து சொல்லி ஆஃப் செய்தது தயாரிப்பு நிறுவனமான லைகா. சில தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிப் போவதாக அறிவித்தது. இதையடுத்து ரசிகர்கள் மிகவும் துவண்டு போயினர். இந்த சமயத்தில் தான் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டை ஒட்டி வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல், தீபாவளி எல்லாம் இப்போது தான்!
இந்நிலையில் இதுகுறித்த தகவலை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், நமக்கு பொங்கல், தீபாவளி, ரம்ஜான் எல்லாமே ஏப்ரல்ல தான் போல. கெட் ரெடி. நாம யாருன்னு சொல்ல தயாராகுங்க என்று கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மீண்டும் குஷியாகி வருகின்றனர்.
ஏனென்றால் விடாமுயற்சி படம் ரிலீஸ் அறிவிப்பை வெளியிடவில்லை என்றால் குட் பேட் அக்லி திரைப்படடமாவது சொன்னபடி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்கும் என ரசிகர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவலோ அறிவிப்போ இப்போது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி அடைந்த தனுஷ் ரசிகர்கள்
இவரது இந்த தகவலால் தனுஷின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிக்கடை படத்தை ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அந்தப் படக்குழு அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி வரும் திரைப்படமான இட்லி கடை படத்தில், தனுஷி, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், அருண் விஜய் போன்ற முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர்.
தனுஷ்- அஜித் போட்டி
படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இந்தப் படம் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் 4வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரலுக்கு ரிலீஸ் ஆனால், நிச்சயம் அது தனுஷ் மற்றும் அஜித் படங்களுக்கு இடையேயான போட்டியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை..
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.