வைரலாகும் அஜித் குமார் மகள் புகைப்படங்கள்.. பர்த்டே பார்ட்டியில் குஷியான குடும்பம்..
நடிகர் அஜித் குமாரின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் சில நாட்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாகவே உள்ளார். காரணம், நடிகர் அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தான். அஜித் குமாரின் திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸாகி 3 ஆண்டுகள் கடந்ததால், அவரது ரசிகர்கள் அடுத்த படத்தின் ரிலீஸ் அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.
வலிமை படத்தில் தொடங்கிய அப்டேட் கேட்கும் பழக்கம் இப்போது வரை தொடர்வதால், அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெயிலர், படத்தின் பெயர், ரிலீஸ் தேதி என அனைத்திற்கும் அப்டேட் கேட்டு வந்தனர். மேலும், பார்க்கும் இடங்களில் எல்லாம் கடவுளே அஜித்தே என கோஷமும் இட்டு வந்தனர்.
அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி
இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. இந்த அறிவிப்பால் குஷியில் இருந்த ரசிகர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகை புத்தாண்டு அன்று பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.